
இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் என்னும் திரையில் தோன்றி கோடம்பாக்கத்திற்கு அறிமுகமான மனோஜ் நேற்று காலமானார்.
மனோஜ் பாரதி நடித்த திரைப்படங்களில் கடல் பூக்கள், சமுத்திரம், அல்லி அர்ஜுனா, சாதுரியன், மகா நடிகன், ஈரநிலம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக சரத்குமார் முரளி ஆகியோருடன் இவர் இணைந்து நடித்த சமுத்திரம் திரைப்படமும் சத்யராஜுடன் நடித்த மகா நடிகன், வருசமெல்லாம் வசந்தம் போன்ற படங்களும் மனோஜ் முத்திரை பதித்தவை.

நடிகர் என்னும் எல்லையைக் கடந்து தன் தந்தையைப் போல இயக்குனராகி புதிய பரிமாணம் பூண்டிருந்தார் மனோஜ். இளையராஜா இசையில் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழித் திங்கள் என்ற படத்தை அண்மையில் இயக்கி இருந்தார் இவர்.
மனோஜ் மறைவை அறிந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மனோஜ் தந்தை பாரதிராஜாவுக்கும் திரைப்பட துறையினருக்கும் ரசிகர்களுக்கும் திமுக தலைவருமான அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தந்தையின் அரவணைப்பு இருந்தாலும் தன்னுடைய திரைப் பயணத்தில் தனி முத்திரையை ஏற்படுத்த பெரிதும் பாடுபட்டார் என்று தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தன்னுடைய இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்
பாரதிக்கு இப்படி ஒரு சோகம் நேர்ந்திருக்கக் கூடாது என்று அவரின் உற்ற நண்பர் இளையராஜா மனோஜ் மறைவு தொடர்பில் இரங்கல் தெரிவித்துள்ளார்

48 வயதான மனோஜ் பாரதிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனால், இதய பிரச்னையை சரி செய்துவிடலாம் என்று, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சில அண்மையில் சேர்க்கப்பட்டு, இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரத்திற்கு முன்புதான் வீட்டிற்கு திரும்பினார் மனோஜ் பாரதி.
ஏற்கெனவே சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்ப உடல் இல்லாத நிலையில் நேற்று அவரின் உயிர் பிரிந்தது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பொழுது அவருக்கு திடீர் மரணம் ஏற்பட்டுள்ளது.

மலையாள நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட மனோஜுக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், அவரின் மறைவு உறவினர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சேத்துப்பட்டில் ‘லேடி ஆண்டாள் பள்ளி’ எதிரே இவரின் வீடு அமைந்துள்ளது..
Manoj Bharathiraja
A4, Alsa Court South India Harrington rd Chetpet
CHENNAI 600031
Tamil Nadu


