Monday, April 20, 2026

எரிவாயு குழாய் தீ விபத்து காரணமாக வாகனங்கள் மடை மாற்றம்!

சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் உள்ள புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் இன்று காலை ஏற்பட்ட எரிவாயுக் குழாய் தீ விபத்தைத் தொடர்ந்து எலைட் நெடுஞ்சாலையின் பல முக்கிய பகுதிகள் மூடப்பட்டுள்ளன.

சீஃபீல்ட் – பண்டார் சௌஜானா புத்ரா இடையேயான பாதை இப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து வாகனங்களுக்கும் தடைசெய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனமான ‘பிளஸ் மலேசியா பெர்ஹாட்’ தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, தெற்கு நோக்கிச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்கள் சீஃபீல்ட் டோல் பிளாசாவிற்கு திருப்பி விடப்படுவார்கள் என்றும் பண்டார் சௌஜனா புத்ரா டோல் சாவடி வழியாக எலைட் நெடுஞ்சாலையில் மீண்டும் நுழையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வடக்கு நோக்கி செல்லும் வாகனங்கள் பண்டார் சௌஜானா புத்ரா டோல் சாவடியில் இருந்து வெளியேறி சீ ஃபீல்ட் டோல் கட்டண சாவடி வழியாக ‘ELITE’ நெடுஞ்சாலையில் மீண்டும் நுழைய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் எக்ஸ் வலைத்தளத்தில் ‘PLUS’ நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை