
மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகாவின் கல்விக் கரமான எம்ஐஇடி(Maju Institute of Educational Development-MIED) அறங்காவலர்க் குழுவின் நிர்வாகக் கூட்டம் நேற்று எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வளாகத்தில் அதன் வேந்தர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழும் கல்வி ஆண்டிற்கான இந்த இரண்டாவது கூட்டத்தில் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி, மாணவர் நலம், மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்தெல்லாம் ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக, மலேசிய இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் எம்ஐஇடி கொண்டுள்ள கடப்பாடு குறித்து அதிகமாக ஆலோசிக்கப்பட்டதாக மஇகா தேசிய ஊடகப் பிரிவு தலைவர் எல் .சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்


