Monday, May 25, 2026

மலேசிய இந்து சங்க தேசிய துணைத் தலைவர் கணேஷ் பாபு புத்தாண்டு வாழ்த்து!

அன்புடைய இந்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளே,
இனிய ஸ்ரீவிசுவாவசு புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

மலேசியா முழுவதிலும் உள்ள இந்துச் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கெல்லாம் என் இதயப்பூர்வமான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய நாள், தமிழராக இருப்பதற்கான பெருமையை நினைவுபடுத்துகிறது. இது நம் பாரம்பரியத்தின் சிறப்பை பிரதிபலிக்கிறது. தமிழ் கலாசாரம், மரபுகள் மற்றும் ஆன்மீகத்தின் எளிமையும் அழகும் நம்மை ஒருங்கிணைத்து, நம் சமூகத்தை முன்னேற்றத்தின் பாதையில் வழிநடத்துகின்றன.

தமிழ் அடையாளத்தை பாதுகாப்பது நமது கடமையாகும். அதைப் பெருமையுடன் நம் பிள்ளைகள் மற்றும் எதிர்கால சந்ததிகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும்.
இந்த நன்னாளில், நம் குடும்பத்துடன் சேர்ந்து, சமூகத்தில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் மலரச் செய்வோம். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிலவ வாழ்த்துவோம்.

இந்தப் புத்தாண்டு ஒரு புது தொடக்கம் ஆகட்டும்.
அன்பும் கருணையும் நம்மிடையே வேரூன்றட்டும்.
தெய்வ அருளால், இந்த சிறப்பான காலத்தில் அமைதியும் செழிப்பும் நம் வாழ்வில் மலரட்டும்.

இந்தப் புத்தாண்டில், மலேசிய இந்துக்கள் ஒன்றிணைந்த, வலிமையான, ஒற்றுமையுள்ள சமூகமாக வளரட்டும்.
நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, நம் வாழ்க்கை முறையை உயர்த்தி, நம் சமயம் பண்பாடு மற்றும் கலாசாரம் உலகளவில் போற்றப்பட செய்ய வேண்டும்.

இந்தத் தமிழ் புத்தாண்டு உங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் சிறப்பை கொணரட்டும்!

அன்புடன்,
கணேஷ் பாபு ராவ்
துணைத் தலைவர், மலேசிய இந்து சங்கம்
மற்றும் உதவித்தலைவர், மலேசிய சர்வ சமய மரறம் MCCBCHST

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை