
இது புத்தாண்டு தருணம்!
மலேசிய இந்திய சமூகத்தில் அண்மையில் உகாதிப் புத்தாண்டு, இன்று தமிழ்ப் புத்தாண்டுடன் வைசாகி, விஷு புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் மலேசிய இந்திய மக்கள் கட்சி-எம்ஐபிபி சார்பில் என் அன்பான புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தமிழ் மக்கள், தெலுங்கு சமுதாயம், மலையாளிகள், சீக்கியர் என வெவ்வேறு சமுதாயத்தினர் சார்பில் கொண்டாடப்பட்டாலும் அவை புத்தாக்கம், நன்றியுணர்வு, நம்பிக்கையின் பிரதிபலிப்பு என்னும் பொதுவான மனப்பான்மையால் ஒன்றுபட்டுள்ளன: இத்தகைய மரபு, நம் வளமான கலாச்சார வெளிப்பாட்டிற்குத் தக்க சான்றாகும். மேலும், ஒரே தேசத்தினராக நம்மை நாமே வலுப்படுத்தும் ஒற்றுமை, மீட்சி, ஒருங்கிணைந்த முன்னேற்றம் ஆகிய பண்பு நலனையும் பிரதிபலிக்கின்றன.
இந்தப் பண்டிகைக் காலம் நம் பன்முகத்தன்மை, வலிமை, ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்துகின்றன. நாம் பேசும் பன்மொழிகள் மற்றும் பழக்கவழக்கங்கள் வேறுபட்டாலும் நம் கனவுகள் ஒன்றே; குடும்பத்தை மேம்படுத்துவது, பாரம்பரியத்தை மதிப்பது, வளமான எதிர்காலத்திற்கான முனைப்பு ஆகியவற்றால் ஒன்றுபட்டிருக்கிறோம்..

மலேசிய இந்திய மக்கள் கட்சியின்-MIPP) சார்பாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்திய சமூகங்களுக்கும் மகிழ்ச்சியான, வளமான மற்றும் அர்த்தமுள்ள புத்தாண்டு அமைய வாழ்த்துகிறேன். மலர்ந்துள்ள புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியை அளிக்கட்டும்.
ஒன்றாக, வலுவாக, ஒன்றுபட்டவர்களாக, இந்தப் புதிய அத்தியாயத்தில் நாம் அடியெடுத்து வைப்போம்!
எஸ்.பி. புனிதன் தலைவர், மலேசிய இந்திய மக்கள் கட்சி-எம்ஐபிபி
துணைத் தலைவர், தேசியக் கூட்டணி(பெரிகாத்தான் நேஷனல்)


