
சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் ஏற்பாட்டில் “தமிழ் மணம்” என்னும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் படைக்கும் இலக்கிய நாடகம் மற்றும் கிராமிய நடனப்போட்டி எதிர்வரும் 26.4.2025 சனிக்கிழமையன்று முதன் முறையாக நடத்தப்படவுள்ளது.
கோலகங்சார் மாவட்டத்தைச் சார்ந்த 13 தமிழ்ப்பள்ளிகள் கலந்து கொள்ளவிருக்கும் இப்போட்டி சுங்கை சிப்புட் துன் சாமிவேலு மாநாட்டு மையத்தில் காலை 8.30 மணிக்குத் தொடங்கவுள்ளது.
இந்நிகழ்ச்சி நன்முறையில் நடைபெற ம.இ.கா தேசியத் தலைவரும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான தான்ஶ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் பேராதரவு நல்கியுள்ளார்.

நம் பாரம்பரியமும், இலக்கியமும் நலிந்து விடாமல் காக்கப்படவும் வளரவும் தமிழ்ப்பள்ளிகள் சிறந்த தளமாக அமையும்.
தமிழ்பள்ளிகளின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் மைல்கல்லாக அமைவது திண்ணம். எனவே, இதுபோன்ற பயன்தரும் நிகழ்வுகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் சுங்கை சிப்புட் இந்திய இயக்கத்திற்கு அவர் பாராட்டையும் அவர் தெரிவுத்தார்.
இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக ம.இ.கா. தேசிய உதவித் தலைவரும் பேராக் மாநிலத் தலைவருமான தான்ஶ்ரீ எம். இராமசாமி- புவான்ஶ்ரீ இந்திராகாந்தி இணையர் கலந்து கொள்கின்றனர்.

தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் இலக்கியத்தை முன்னிறுத்தி சிறப்பாக இப்போட்டியை ஏற்பாடு செய்த சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத் தலைவர் வீ. சின்னராசுவிற்கு பாராட்டும் தெரிவித்தார்.
கோலகங்சார் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்கு வாழ்த்து தெரிவித்த அதேவேளை,
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தம் பாரம்பரிய கலைகளில் சிறந்து விளங்கவும் திறமையை வெளிக்கொணரவும் இதுபோன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் எல்லா மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
“தமிழ் மணம்” இலக்கிய நாடகம் மற்றும் கிராமிய நடனப்போட்டி சிறப்பாக நடைபெற உதவிக்கரம் நீட்டிய அனைத்துத் தரப்பினர், கோலக்கங்சார் மாவட்டத் தமிழ் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவரையும் தமிழ்மணத்தை நுகர அன்புடன் அழைப்பதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சின்னராஜூ கேட்டுக்கொள்கிறார்.
தகவல்:
எல். சுப்பிரமணியன், தலைவர்-ம.இ.கா. தேசிய தகவல் பிரிவு


