
தமிழ்க் கடவுளும் கௌமார வழிபாட்டு நாயகனுமான திருமுருக திருத்தல அடையாளமாக உலக அளவில் திகழும் பத்துமலை திருத்தளத்தில் தற்போது பேரளவில் கந்த சஷ்டி பாராயணம் நடைபெற்று வருகிறது.
இன்று தொழிலாளர் தினம் மே முதலாம் நாள் கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்தின் ஒருங்கிணைப்பில் தேவஸ்தான அறங்காவலரும் ‘டி எஸ் கே’ பொதுநல அமைப்பின் தலைவருமான டத்தோ ந. சிவகுமார் தலைமையிலும் ‘மஹிமா’ அமைப்பின் ஏற்பட்டு ஆதரவிலும் தற்போது நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சி காலை 8:00 மணி அளவில் விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.

.தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து வருகை புரிந்துள்ள குகாஸ்ரீ விஜயகுமார், கந்த சஷ்டியின் ஆன்மீக மேன்மை குறித்து உரையாற்றினார்
தொடர்ந்து, தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த காவடி சிந்து குழுவினரின் காவடி ஆட்டம் பத்துமலை திருத்தளத்தில் கூடி இருக்கின்ற முருக பக்தர்களின் ஆன்மீக மனம் மகிழும்படி நடைபெற்றது.

தற்பொழுது கந்த சஷ்டி பாராயணம் நடைபெற்று வருகிறது


