
அரசியல் தலைவரா, எழுச்சிமிக்க பேச்சாளரா? சுயமரியாதை உணர்வாளரா? ஆன்மிக சிந்தனையாளரா? சமூகப் பற்றாளரா? எழுத்தாளரா? மேநாள் துணை அமைச்சரா? கல்வியாளரா? ஆசிரியரா என்றெல்லாம் எந்த வகையிலும் வரையறுக்க முடியாத மூத்தத் தலைவராகவும் மலேசிய இந்திய சமூதாயத்தின் ஆவணப் பெட்டகமாகவும் சமூக வீதியில் செம்மாந்து உலா வருகிறவரும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறவாரிய அறங்காவலரும் தேவாசர், துன் வீ. திருஞான சம்பந்தனார், டான்ஸ்ரீ மாணிக்க வாசகம், துன் சாமிவேலனார் ஆகியோரின் தலைமையில் இயங்கிய அரசியல் செயல்பாட்டாளருமான தான்ஸ்ரீ டத்தோ டாக்டர் க.குமரனார் இன்று மே 14-ஆம் நாளில் 89-ஆவது அகவையை எட்டுகிறார்.
இன்று 88-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் அவரை குமரி நல்லாள் நெஞ்சார வாழ்த்துகிறாள்.
அவரின் 88-ஆவது அகவை நிறைவு நாளான நேற்று மே 13-ஆம் நாள் சந்தித்தபொழுது, அவர்தம் உள்ளக் கிடங்கிலிருந்து, ஏராளமான கருத்துக் குவியலை அள்ளிக் கொட்டினார்.
மலேசிய இந்தியர்களின் கடந்த கால அரசியல், நிகழ்காலம், எதிர்காலம், சமூகத்தின் நிலை, பொருளாதாரம், இன்னும் பிற கருத்து சார்ந்து அவர் வெளியிட்ட கருத்துக் குவியலை இன்று முழுமையாகத் தொகுக்க முடியாமல் போய்விட்டது.

இவர் சிந்திய கருத்து முத்துக்கள் யாவும் தொகுக்கப்பட்டு, விரைவில் குமரியின் கழுத்தை அலங்கரிக்கும்.


