
மலேசிய மாந்த நேயத் திராவிடர்க் கழக ஏற்பாட்டில், கடந்த 1.6.2025ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் 3:00 மணியளவில், கோலாலம்பூர்; பிரிக்பீல்சு ருக்குன் தெத்தாங்கா மண்டபத்தில்,
தொடக்கப்பள்ளிகளிலும் இடை நிலைப் பள்ளிகளிலும் தமிழ்க்கல்வி நலன் கருதி ஆய்வரங்கம், கழகக் கல்விக் குழுவின் துணைத் தலைவர், ஆசிரியர் கெங்கம்மாள் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.
இந்த ஆய்வரங்கில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கிய ஆய்வாளர்கள்:

‘தொடக்கப்பள்ளிகளில் தமிழ்க் கல்வியின் நிலை’ என்ற தலைப்பில் மேனாள் தலைமை யாசிரியர் கெங்கம்மாள் மலையரசன் பேசினார்;
இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்க் கல்வியின் நிலை என்ற தலைப்பில் ‘முத்தமிழ் முரசு’ இரா. திருமாவளவன் உரை நிகழ்த்தினார்.
தமிழ்ச்சுடர்’ மன்னர் மன்னன் மருதை,
‘உயர்க்கல்விக் கூடங்களில் தமிழ்க் கல்வியும் அது சார்ந்த துறைகளும்’
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்; உயர்க்கல்வி முடித்த மாணவர்களுக்-கான வேலை சந்தை குறித்த தகவலையும் அவர் எடுத்துரைத்தார்

தொடர்ந்து, இடைநிலைப் பள்ளியில்
தத்தளிக்கும் தமிழ்க்கல்வி ஏன்ற தலைப்பில் முனைவர் இரா. குமரன் வேலு பேசினார்.
வழக்கறிஞர் இரா. கனல்வீரன்
தமிழ்க்கல்வியும் அரசியலமைப்புச் சட்டமும் என்ற தலைப்பில் ஆற்றிய உரைக்குப் பின் நிறைவாக தமிழ்த்திரு. குமரன் (ஐ சேனல்) ஊடகத்தில் வாடும் தமிழ்க்கல்வி என்ற தலைப்பில் கருத்தாடினார்.
உரையாற்றிய ஆய்வாளர்களோடு, தொடர்து கலந்தாய்வு இடம்பெற்றது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


