
பா கு சண்முகத்தின் அஞ்சடியில் ஓர் உலகம் என்னும் சிறுகதை மலாய் மொழியில் மொழியாக்கம் கண்டுள்ளது. வல்லினம் மற்றும் ‘பென் மலேசியா’ ஏற்பாட்டில் நடைபெற்ற முக்கோண கதைகள் விழா வில், பண்பட்ட மூத்த எழுத்தாளரும் அரை நூற்றாண்டுக்கு மேல், தமிழ்-தமிழர் தளம் சார்ந்து பணியாற்றுபவருமான தமிழ்த்திரு. ப கு சண்முகம், 1976ஆம் ஆண்டில் எழுதி பரிசுபெற்ற ‘அஞ்சடியில் ஓர் உலகம்’ என்னும் சிறுகதை மலாய் மொழியில் மொழியாக்கம் பெற்று வெளியீடு கண்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற திருமுருகன் திருமுறை கருத்தரங்க ஏற்பாட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ப.கு. சண்முகத்தைப் பாராட்டி அவரின் நீண்டகால நண்பர் தான்ஸ்ரீ க.குமரன் பொன்னடை அணிவித்து சிறப்பித்த-துடன், தமிழர் திருநாள் தந்த எழுச்சிக் காலத்தில் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்த பல முன்னோடி இளம் எழுத்-தாளர்களில் இவரும் ஒருவர் என்று புகழாரம் சூட்டினார்..
சிறுகதைகளில் மட்டுமல்லாது மேடை-களிலும், சமுதாய அவலம், வாழ்வியல் சிக்கல், கல்வி- பொருளாதார மறு-மலர்ச்சி குறித்தெல்லாம் முழங்கியவர் நண்பர் ப.கு.ச.
அவரின் படைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரத்தைக் கண்டு மகிழ்கிறேன்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், குறிப்பாக வல்லினம் ஏற்பாட்டாளருக்கு நன்றி. தாயெழிற்தமிழை எந்தன் தமிழரின் கவிதை தன்னை ஆயிரம் மொழியில் காணவேண்டும் என்ற பாவேந்தரின் அமுத வரிகளை தலைமேற்கொண்டு, நூற்று மூன்று தமிழ்க் கவிதைகளை ஆங்கில மலாய் மொழிகளில் வெளிக் கொணர்ந்தேன்.
நம் இலக்கிய படைப்புகள் சீன, மலாய் மொழிகளிலும், சீன-மலாய்ப் படைப்பு-கள் தமிழ் மொழியிலும் தொடர்ந்து வெளிவருவதை சமுதாய அமைப்புகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் தான்ஸ்ரீ க. குமரன் கேட்டுக்கொண்டார்.
தகவல்: தான்ஸ்ரீ க. குமரன்


