Monday, July 13, 2026

தேசிய பள்ளிகள் இடையிலான சதுரங்க போட்டி! -தங்கப் பதக்கம் வென்ற நெகிரி மாநில மாணவியர்!!

சரவாக் மாநிலம், கூச்சிங் மீரியில் மலேசிய பள்ளி விளையாட்டு மன்றத்தின் சதுரங்க போட்டி மிகப்பெரிய அளவில் அண்மையில் நடைபெற்றது.

நாடு தழுவிய அளவில் விளையாட்டாளர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் பெண்கள் 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நெகிரி செம்பிலான் மாநில பள்ளி மாணவிகள் தங்கப்பதக்கம் வென்று பரபரப்பை ஏற்படுத்தினர்.

பெண்கள் (P18 குழு பிரிவு) சதுரங்க போட்டியில் நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கப்பதக்கம் வென்றது மிகப்பெரிய சாதனையாகும்

  1. அனுஷ்கா முருகன் – SMK Puteri
  2. லீ ரூ ஷான் – Sekolah Tinggi Chung Hua
  3. காஞ்சனஸ்ரீ ஜீவரத்னம் – SMK Puteri
  4. ஷெவல்லினி சரவண சுகுந்தன் – SMK Tinggi Port Dickson ஆகியோர் தங்களின் முழு திறமையை வெளிப்படுத்தி தங்கப்பதக்கம் வென்றனர்.

நெகிரி செம்பிலான் மாநில பள்ளி விளையாட்டு மன்றத்தின் சதுரங்க தொழில்நுட்ப மற்றும் மேம்பாட்டு குழுத் தலைவர் கதிராசன் விதானதன் மற்றும்
நெகிரி செம்பிலான் மாநில கல்வித் துறையின் மாணவர் திறன் மேம்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் ஃபஸீருல் அக்மார் பின் அஹ்மத் ஆகியோர் ஒத்துழைப்பு இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. .

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை