நீண்டகால இனிய நண்பர் கே.ஆர்.சண்முகம் அவர்களின் மறைவை அறிந்து அதிர்ச்சியுற்றேன். 1960ஆம் ஆண்டுகளில் இருந்தே அவருடன் நட்பு கொண்டிருந்தேன்.அகில மலாயா திராவிடர் கழககம், அகில மலாயா தமிழர் சங்கம், தமிழர் திருநாள், பொங்கல் விழா என்று இளமையில் அவர் கோலக்கங்சாரிலிருந்தபோதும். பின்னர் அவர் கோலாலம்பூர் வந்தபின் ம.இ.கா.அரசியலில் தீவிரம் காட்டியபோதும் எங்கள் நட்பு வளர்ந்தது.
வடமலாயா எழுத்தாளர் சங்கம், பினாங்கு மருத்துவ சங்கம். பினாங்கு மாநில ம.இ.கா.இவற்றில் முக்கிய பொறுப்பு வகித்தவரும். தான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகத்தின் வரலாற்றைத் தொகுத்தவருமான அமரர் சோனைமுத்துவின் அன்பராவார் இவர்.
வாரம் குறைந்தது ஒருமுறையாவது அழைக்காமல் இருக்கமாட்டார்.புலன வழி நிறைய தமிழக செய்திகளை அனுப்பிக்கொண்டிருப்பார்.நண்பர்களை ஒவ்வொருவராக இழந்துவருகிறேன்.அந்த வரிசையில் இவரும் சேர்ந்துகொண்டார்.
என் அரசியல் பயணத்தில் துணைநின்ற நூற்றுக்கணக்கான தொண்டர்களில் முன்வரிசையில் நின்று பாடாற்றியவர்.அவரின் ஆதன் அமைதியடைய இறையருளை வேண்டுகிறேன் என்று டான்சி குமரன் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.


