
உறை உணவுத் தயாரிப்பு, அதுதொடர்-பான நுட்பம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி மனித வள அமைச்சகத்தின் சார்பில் 150 தொழில்முனைவோருக்கு குறுகியகால பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டன.
மனிதவள அமைச்சகத்தின் ஆதரவுடன் இயங்குகின்ற Malaysian Indian Skills Initiative-MISI என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் இந்திய இளைஞர்களின் வேலையிவாய்ப்பை இலக்காகக் கொண்டு MISI-2.0 பயிறசித் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதன்வழி 500-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதியுடன் தொழில்பயிற்சி அளிக்கப்-படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் சிறப்பு அதிகாரி டீக்கம் லூர்த்ஸ் இதன் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்-கையில், மனிதவள அமைச்சு, இந்திய இளம் தொழில்முனைவோரை இலக்காகக்கொண்டு ‘மிசி’ எனப்படும் மலேசிய இந்திய திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்தது என்றார்.

மனிதவள அமைச்சின்கீழ் இயங்கும் எச்ஆர்டிகோர்ப், பிரதமர் துறையின் கண்காணிப்பில் செயல்படும் மித்ரா ஆகியவற்றின் ஆதரவுடன் இத் திட்டம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் நாடுமுழுவதும் 150 பயிற்சித் திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டு, அதன்வழி 8ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் பெற்றதாக அவர் தெரிவித்தார் .
MISI-1இல் அதிகமான இந்தியர்கள் ஆர்வம் காட்டியதன் அடிப்படையில், அடுத்தக்கட்ட நகர்வாக MISI-2 விரைவில் தொடங்கப்பட இருக்கிறது என்று, கடந்த வாரம் கோலாலம்பூர் IMPERIUM பன்னாட்டுக் கல்லூரியில் அந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்
இதன் மூலம் இந்திய இளைஞர்களி-டையே நிலவும் வேலையில்லாப் பிரச்சினைக்கு ஓரளவு அளவில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை அமைச்சுக்கு உள்ளது.
ஆகவே இந்திய இளைஞர்கள், வாய்ப்புகள் இல்லையென்று வருத்தப்படாமல் இதுபோன்ற வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டெக்கம் வலியுறுத்தினார்.
முன்னதாக மிசி திட்டத்தின் கீழ் இன்று இரண்டு பயிற்சித் திட்டங்களை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி.
உறைந்த உணவு உற்பத்தி, தொழில் நுட்பங்கள், திறன்கள், தொழில்முனை-வோர் முதல் பயிற்சி திட்டத்தில் அங்கம் வகிக்கிறது.
தொழில் முனைவோருக்கான உணவுப் பாதுகாப்பு, பேக்கேஜிங் பட்டறை இரண்டாவது பயிற்சி திட்டத்தில் இடம் பெறுகிறது.
இன்று செராஸில் நடைபெற்ற மிசியின் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 75 பேர் இப்பயிற்சியில் கலந்து பயன் பெற்றனர் என்று அவர் கூறினார்.


