Thursday, April 2, 2026

இல்லந்தோறும் திருவாசகம்!

திருவாசகம் சைவ சமயத்தின் ஆன்மிகப் பெட்டகம்; மாணிக்கவாசகப் பெருமான் சிவபெருமான்மீது கொண்டிருந்த மாறா சிவநேசமும் தளராப் பக்தி பெருக்கும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இறை இலக்கியமாகும்.

அத்தகைய சிறப்புமிக்க சிவ நெறிசார் திருமுறையை மலேசியத் திருநாட்டில் ‘இல்லந்தோறும் திருவாசகம்’ இன்னும் இறைமுழக்கத்துடன் பக்த அன்பர்களிடம் கொண்டு சேர்ப்பதை பெரும்பேறாகக் கருதுவதாக இந்நூலின் ஆக்குநர் பரமசிவம் தெரிவிக்கிறார்.

இந்த இயக்கத்தை தவத்திரு தருமை ஆதீனம், தம் திருக்கரங்கலால் தொடக்கிவைக்க இசைந்திருப்பததை எங்களின் பூர்வப்பயனாக கருதுகிறோம்.

இந்தத் கருணத்தில் இந்நூலுக்கு ஆசியுரை வழங்கியதோடு நேரில் வருகை தந்து ஆசிவழங்க ஒப்புதல் அளித்துள்ள அருள்மிகு திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் அதிபர் தவத்திரு பால யோகி சுவாமிகளுக்கு நன்றி மலர்களை சமர்ப்பிப்பதாகவும் பரமசிவம் தெரிவித்துள்ளார்

தமிழ்தம் ஆன்மீகப் பயணத்தில் ஒரு வழிகாட்டியாக திருவாசகத் தொகுப்புகள் திகழும். மாணிக்கவாசகர் தனது பாடல்களில் தன்னிலை மறந்து இறைவனின் அருளை அழைக்கும் கனவுகளை எழுப்புகின்றார்.

“போகமார் நின்ற பிரானருள் சேர்பவர்க்குப் போகமாம் இன்பம் பிறன்!”, எவ்வளவு தாழ்ந்தவராக இருந்தாலும் சிவபெருமான் அருள் பெற்றால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது, திருவாசகம்.

ஆன்மிக ஞானத்தை ஊக்குவிக்கவும் மனிதப் பிறவி முற்றுபெறவும் உதவுகிறது.

குடும்ப வாழ்வில் திருவாசகம் ஒரு நிரந்தர இடத்தினைப் பெறுவதற்கு ‘இல்லந் தோறும் திருவாசகம்’என்னும் திட்டம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

குடும்பங்களில் ஆன்மிக எண்ணங்களை ஊக்குவித்தல் மூலம் தற்சார்பு அதிகரிக்கும், மேலும் வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் நிறையும். திருவாசகப் பாடல்களை அணுதினமும் ஓதினால், அது, அன்றாட வாழ்வில் சிவபெருமான் அருள் நிலைத்திருக்க உதவும்.

“இல்லந் தோறும் திருவாசகம்” திட்டத்தின்போது உங்களது பங்காளர்கள் என்னும் குடும்ப உறுப்பினர்களுக்கு திருவாசகத்தின் சிறப்பு மற்றும் உள்ளார்ந்த பொருள் பற்றி விளக்குவது முக்கியம். தினசரி ஓதலின்மூலம் உள்ளம் அமைதி அடையும்படி செய்யலாம்.

மலேசியத் திருநாட்டில் பட்டர்வெர்த் நகரில் அமையவிருக்கும் மிகப் பெரிய சிவனாலயமான அருள்மிகு கெங்காதர சிவபெருமான் தேவஸ்தான அடிக்கல்நாட்டு விழாவிக்கு வருகைதரும் தவத்திரு தருமை ஆதீனம் ‘இல்லந் தோறும் திருவாசகம்’ இயக்கத்தினை தொடக்கி வைத்து ஆசி வழங்க உள்ளார்.

இந்தப் பக்தி திருமுறையை தமிழ் படிக்கத் தெரியாதவர்களும் படித்து இன்புற வேண்டும் என்னும் நல்லெண்ணத்தில் 658 திருவாசகப் பாடல்களையும் ஆங்கில உச்சரிப்போடு தொகுத்து கொடுத்துள்ள சிவநேயச் செல்வர் பரமசிவம் மருதை தெரிவிக்கிறார்.

‘தென்னாடுடைய சிவனே போற்றி’
என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை