Monday, April 20, 2026

மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் ஐ இளவழகின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்!

எண்ணற்ற இலக்கிய படைப்புகளைத் தந்த கவிமகன், தமிழியப் பாங்காளர் ஐ இளவழகின் மறைவிற்காக குமரி முதற்கண் தன் இரங்கலை தெரிவிக்-கிறாள்!

தில்லி பல்கலை கழகத்தில் துணை பாட நூலாக இடம் பெற்றுள்ள மனிதனின் கதை என்னும் தத்துவ கட்டுரைத் தொகுப்பை படைத்தவர் கவிஞர் இளவழகு;

மண்ணுக்கு சொந்தம் என்னும் சிறுகதை தொகுப்பு நூல் மலேசிய தமிழ் இலக்கிய உலகில் என்றென்றும் பேசப்படும்;

அதைப்போல, ‘வேலவன் வெண்பா 100’ பாநூல், இலட்சிய பயணம் என்னும் புதினம், ‘அமுதும் தேனும்’ கவிதைத் தொகுப்பு, ‘மீட்சி’ என்னும் சிறுகதை தொகுப்பு நூல், ‘அன்னைக்கோர் அணி-யாரம்’ போன்றன ஐ இளவழகனாரின் இலக்கிய மேலாண்மைக்கு என்றென்-றும் கட்டியம் கூறுவன.

அதைப்போல நினைவில் வாழ முனைந்துவிட்ட இளவழகனார் பெற்ற இலக்கியப் பரிசுகள் ஏராளம்.

பிரதமர் தன் ரசாக் கவிதை போட்டியில் முதல் பரிசு; ஈப்போ குறள் விழா கவிதைப் போட்டியில் முதல் பரிசும் ‘பாவலர் பொன்புனை விருதும்’, பெரும் புலவர் இராமதாசர் தலைமையில் நடைபெற்ற கவிதை பாடும் போட்டியில் மூன்றாம் பரிசு, தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய முதல் நாவல் போட்டியில் முதல் பரிசு, தமிழ் முரசு பத்திரிகையின் சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கம், பேரவை கதைகள் சிறுகதை போட்டியில் முதல் பரிசுடன் தொடர்ந்து இரண்டாம் மூன்றாம் பரிசுகள், ஆஸ்ட்ரோ வானவில் நடத்திய கண்ணதாசன் கவிதை போட்டியில் வெள்ளி 25 ஆயிரம் மதிப்புள்ள வைர கழுத்தணி பரிசு,
இலட்சிய பயணம் நாவல் எஸ் பி எம் தேர்வுப் பாடமாக ஏற்பு என்றெல்லாம் ஏராளமான இலக்கிய படைப்புகளை மலேசியத் தமிழ் குலத்திற்கு அளித்திட்ட ஐ இளவழகனார், தொடர்ந்து சமூக வீதியிலும் பவனி வந்தார்.

Made with LogoLicious Add Your Logo App

எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர், 12 ஆண்டுகளாக இலக்கிய வகுப்புகளை கட்டணம் இன்றி நடத்தியது, அகரம் பருவ இதழின் ஆசிரியர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க பேரவையில் பொறுப்பு, மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தில் ஈடுபாடு, தமிழ்நாட்டு அரசு விருந்தினராக சிறப்பு என்றெல்லாம் தமிழ் இலக்கிய உலகில் செம்மாந்து பவனி வந்த இளவழகனார் நேற்று காலமானார்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி ஒன்று நவம்பர் திங்கள் இருபதாம் நாள் பிறந்த ஐ இலவழகு, முதுமை மற்றும் உடல் நலிவு காரணமாக நேற்று இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.

அவருக்கான இறுதி மரியாதை நாளை, ஜூன் 12 வியாழக்கிழமை பகலில் நடைபெற உள்ளது.

இதன் தொடர்பில் ஐ இளவழகு குடும்பத்தின் சார்பில் மின் பதாகை வெளியிடப்பட்டுள்ளது. இச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள அப்பதாகையில் உள்ள தகவல்படி வாசகர்கள் விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

மேல் விவரத்திற்கு அதே மின் பதாகையில் உள்ள அவரின் மகனுடன் தொடர்பு கொண்டு மேற்தகவல் பெறலாம்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை