Monday, April 20, 2026

காலை ஒடித்து குழந்தைகளையும் மறைத்த முன்னாள் கணவனை கடைசியாகக் காண விரைகிறார் லோ சியு ஹொங்!

லோ சீயூ ஹொங்

குடும்ப வன்முறைககு, குறிப்பாக கணவனின் வன்கொடுமைக்கு ஆளாகி மூன்று பிள்ளைகளையும் காணமுடி-யாமல் ஆண்டுக் கணக்கில் பரிதவித்து அல்லல்பட்ட ஓர் இளம் தாயான லோ சியூ ஹொங், தற்பொழுது தன் முன்-னாள் கணவன் முகமட் நாகேஸ்வரன் முனியாண்டி இறந்துவிட்ட நிலையில் அவரின் முகத்தை கடைசியாக ஒரு-முறை காண்பதற்கும் பிள்ளைகளுக்கு காட்டுவதற்கும் சுங்கைப் பட்டாணிக்கு விரைந்து கொண்டிருக்கிறார்.

விடியற்காலை இரண்டரை மணி அளவில் தோட்டத்தில் உள்ள உறவினர் ஒருவர் சொன்ன தகவலின் அடிப்படை-யில் முன்னாள் கணவன் இறந்த செய்தி தெரிய வந்ததாக கூறினார் லோ சியூ.

இந்த இரும்புப் பெண்மணி, தன் இளம் வயதில் பட்ட துயரும் இன்னலும் இன்-னொரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாது.

2020-இல் தங்களின் மூன்று பிள்ளை-களையும் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றிய முகமட் நாகேஸ்வரன், அதற்குமுன், 2019 லிருந்தே குழந்தை-களை லோ சியூ கண்ணில் படாமல் பெர்லிசில் மறைத்து வைத்திருந்தார்.

அதற்கு முன்பே முஸ்லிம் சமயத்திற்கு மதம் மாறி இருந்தார் முகம்மது நாகேஸ்வரன்.

குழந்தைகளைக் காணவோ அழைத்துவரவோ இயலாத நிலையில் இருந்த லோ சியூ, ஆட்கொணர்வு மனுவை சமர்ப்பிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார்.

அதன் அடிப்படையில் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தும் குழந்தைகள் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தது.

இரண்டாயிரத்து பத்தொன்பதில் இடைக்கால உத்தரவைப் பெற்ற லோ சியூ, 2021-இல் முழு உத்தரவை நீதிமன்றத்தின் மூலம் பெற்றார்.

இதற்கு இடையில், இந்த விவகாரம் தொடர்பில் பெர்லிஸ் மாநில இஸ்லாமிய மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பல தடைகளை எதிர்கொண்டு வந்தார் லோ சியூ.

இந்தச் சூழலில், கடந்த ஏப்ரல் மாதம் எட்டாம் நாள், 3 பிள்ளைகளையும் தன்னுடன் வைத்துக் கொள்வதற்கும் பராமரிப்பதற்கும் லோ சியூவிற்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட உத்தரவை மறு உறுதிப்படுத்திய கூட்டரசு நீதிமன்றம், பிள்ளைகள் ஒருதலைப்-பட்சமாக மதம் மாற்றியது செல்லாது என்பதற்கும் இறுதித் தீர்ப்பு வழங்கியது.

அதற்குப் பின், லோ சியூ, தன் வாழ்க்கையை அமைதியான வழியில் தொடர்ந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் 38 வயதான முன்னாள் கணவன் இறந்துவிட்ட தகவலை அறிந்து அவரைக் காண்பதற்கும் பிள்ளைகளுக்குக் காட்டுவதற்கும் சென்று கொண்டிருக்கிறார்.

முகமது நாகேஸ்வரனுக்கு எதிராக லோ சியூ தொடர்ந்த குற்றவியல் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அந்த முன்னாள் கணவர் திடீரென இறந்த-தற்கான காரணம் எதுவும் தெரிய வில்லை என்றும் தற்கொலை முயற்சி என்று கேள்விப்பட்டதாகவும் உடற்கூறு ஆய்வு அறிக்கையை தன்னுடைய வழக்கறிஞர் Shamsher Singh Thind கண்டறிந்த பின்னரே எது உண்மை என்று தெரியவரும் எனவும் லோ சியூ .ஹொங் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை