Monday, April 20, 2026

மிட்லண்ட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கு வரும் கல்வியாண்டில் வெ.1லட்சம் நிதி உதவி! -ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு!

நாட்டில் நவீன முறையில் கட்டி எழுப்பப்பட்டுள்ள தமிழ் பள்ளியும் விடுதி விடுதி வசதியைக் கொண்டுள்ள ஒரேத் தமிழ்ப்பள்ளியுமான ஷாஆலம் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் மறுமலர்ச்சிக்காக 2026 கல்வி ஆண்டில் பள்ளி வளர்ச்சி நிதியாக 50ஆயிரம் வெள்ளியும் விடுதி மேம்பாட்டிற்கு 50,000 வெள்ளியும் என ஒரு லட்சம் வெள்ளியை சிலாங்கூர் மாநில அரசின் சார்பில் வழங்க இருப்பதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பா ராய்டு இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் மிகச்சிறந்த முறையில் இயங்குகின்ற மிட்லன்ட்ஸ் தமிழ்ப் பள்ளியின் மேம்பாட்டிற்காக நிகழும் கல்வி ஆண்டிற்குரிய நிதியாக ஏற்கனவே வெள்ளி 50,000 அளிக்கப் பட்டுள்ளது. விவேக பள்ளியை போல விளங்குகின்ற இந்த பள்ளி முறையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது;

இந்தப் பள்ளியின் வளர்ச்சியில் சிலாங்கூர் ஒற்றுமை அரசு அக்கறைக் காட்டுவதைப் போல, சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் இதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று பாப்பா ராய்டு இதேத் தமிழ் பள்ளியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின் பொழுது கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் ஆட்சி மன்றம், சுகாதாரம்-சுற்றுச்சூழல்-இந்தியர் நலப் பொறுப்-பாளருமான வீ. பாப்பா ராயுடு, நாட்டில், இந்திய சமுதாய கல்வி மறுமலர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படுகின்ற தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாக மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.

மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி வசதியைக் கொண்டுள்ள ஒரேத் தமிழ்ப் பள்ளியும் இதுதான் என்று அவர் பெருமிதத்துடன் கூறிய பாப்பா ராய்டு, இப்பள்ளியும் மாணவர் விடுதியும் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாநில அரசு அக்கறைக் கொண்டுள்ளது என்றார்.

முன்னதாக, பள்ளியின் வாரியக் குழுத் தலைவர் க.உதயசூரியன் பேசியபோது, மிட்லண்ட்ஸ் பள்ளி மாணவர் விடுதி-யின் பராமரிப்பில் ஏற்படும் சிக்கல் குறித்து எடுத்துக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, பள்ளி வாரிய உறுப்பினர்கள் மு.சீரிய நாதன், குமர வேல், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி, சிலாங்கூர் மாநில கல்வித் துறை துணை இயக்கு-நர் முனைவர் ரஸிடா, மலேசியத் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மன்றத் தலைவர் பாண்டியன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை