Thursday, April 16, 2026

தமிழரை தமிழரே இரட்டடிப்பு செய்யலாமா? முனைவர் கலையமுதன் இப்படி பேசலாமா??

தமிழ் நாடு, சேலத்தைச் சேர்ந்த பட்டி மன்ற நடுவர், நகைப் பேச்சாளர் முனைவர் எஸ்.டி. கலையமுதன் வல்லமை தாராயோ என்ற தலைப்பில் நேற்று, டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் சிறப்புற பேசினார்.

பேச்சுக்கு நடுவே, விவேகானந்தரின் வல்லமைக் குறித்துப் பேசினார்.

விவேகானந்தரைப் பற்றி பேசுவதிலும் புகழ்வதிலும் எந்த வருத்தமும் இல்லை; அப்பழுக்கில்லாத அந்த விவேகத் துறவி, பாராட்டுதற்குரியவர்தான்;

இளைஞர்களிடையே சமய மறுமலர்ச்சி-யுடன் சமூக மறுமலர்ச்சியும் ஒருசேர ஏற்பட வேண்டும் என்று உண்மையாக விரும்பினார் சுவாமி விவேகாந்தர்.

விவேகானந்தரைப் புகழ்ந்துபேசும் ஒவ்வொரு தமிழரும், அவர் சிக்காக்கோ செல்வதற்கு அடியும் முதலுமாக ஒரு செம்மாந்தத் தமிழரைப் பற்றி எள் முனையளவுகூட குறிப்பிடாமல் வஞ்சிப்-பதும் இரட்டடிப்பு செய்வதும் ஏன் என்றுதான் தெரியவில்லை.

மற்றவர்களைப் போலவே, முனைவர் எஸ்.டி.கலையமுதனும் ஒரு நல்ல தமிழரை, நல்ல மன்னரை, தலைசிறந்த சைவ சிந்தாந்தியை போகிற போக்கில் இருட்டடிப்பு செய்து பேசியதை ஏற்க முடியவில்லை.

அந்தத் தமிழர், ஆங்கிலேய ஆட்சியாளர்-களும் வியந்த இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி.

19-ஆம் நூற்றண்டின் பிற்பகுதியில் சிக்காகோ நகரில் நடைபெற்ற உலக சமய பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி, சைவ சமய அறிஞரும் ஆங்கிலப் புலமை மிக்கவரும், நடுநிலை தவறாத ஆட்சியாளருமான மன்னர் பாஸ்கர சேதுபதிக்குத்தான் அழைப்பிதழ் வந்தது.

அவர் கலந்துகொள்ள முடியாத சூழலில்தான், எதிர்பாரா விதமாக விவேகானந்தரை அவர் அனுப்பி வைத்தார்.

ஒருவேளை, மன்னர் பாஸ்கர சேதுபதி எல்லாவற்றையும் சமாளித்து, சிக்காகோ சென்றிருந்தால், அவர் இந்து சமயத்தைப் பற்றி பேசியிருக்க மாட்டார். சைவ நெறி சார்ந்துதான் பேசியிருப்பார்.

அந்த வகையில், தமிழர்களின் பாரம்பரிய சமயக் கொள்கையான சைவம், உலகெல்லாம் பரவியிருக்கும்; அவ்வாறு நடைபெறாமல் போனது, தமிழர்க்கு போதாத காலம் என்றுதான் கருதவேண்டி உள்ளது; குறிப்பாக, சைவத்திற்கும் இது தவக்குறைவாக அமைந்துவிட்டது.

பாஸ்கர சேதுபதி சிறுவனாக இருந்த-பொழுதே, அவரின் பெற்றோர் இருவரும் மறைந்துவிட்டனர். சிறுவனாக இருந்ததால் அரியணை அமரமுடிய-வில்லை. இதனால், இராமநாதபுரத்து அரண்மனைப் பெரியவர்கள், பாஸ்கர சேதுபதியை பராமரித்து வளர்ப்பதற்-காக ஓர் அறங்காவலர்க் குழுவை நியமித்தனர்.

ஆனாலும், அந்தக் குழுமீது, நடுநிலை-யாளர்களுக்கு நம்பிக்கை இல்லை; ஐயம் எழும் அளவிற்கு நாட்தோறும் சம்பவங்கள், திரைமறைவில் அரங்கேறின.

அரண்மனைச் சொத்து ஏராளம்; அரசக் கருவூலத்தில் தங்கக் கட்டி-ஆபரணங்-களுடன் குறுநில மன்னர்கள், ஜமீன்-தார்கள், கப்பம் கட்டுவோர் உள்ளிட்ட தரப்பினரின் நில ஆவணங்களும் நிறைந்திருந்தன. எல்லாவற்றையும்விட, இளவரசன் பாஸ்கர சேதுபதியின் உயிருக்கும் கடும் மருட்டல் நிலவியது.

இவை எல்லாவற்றையும் தூரநோக்கு எண்ணத்துடன் அவதானித்த அரண்-மனை நடுநிலையாளர்கள், சம்பந்தப்-பட்ட அறங்காவலர்க் குழுவைக் களைத்துவிட்டு, பாஸ்கர சேதுபதியை வளர்க்கும் பொறுப்பை, வட்டார ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்தனர்.

வழக்கமாக ஆங்கிலேய ஆட்சியாளர்கள், தில்லுமுல்லுத் தனத்தில் பெயர்பெற்ற-வர்கள்; கிடைத்ததை யெல்லாம் சுருட்டி, பிரிட்டிஷ் அரண்மனைக்கு அனுப்பி, ராணியிடம் நல்ல பெயர் எடுப்பதில் குறியாக இருந்தவர்கள். இல்லா-விட்டால், கோகினூர் வைரம் கடல் கடந்து பயணிக்குமா என்ன?

இவர்களில் விதிவிலக்காக, இராபர்ட் கிளைவ் மட்டுமே, கள்ளத் தனமாக அபகரிக்கும் சொத்துக்களை இங்கிலாந்து அரண்மனைக்குத் தெரிவிக்காமல், தான், தனியாக-கமுக்கமாக பதுக்கிவைத்தான்.

இப்படிப்பட்ட சூழலில், இராமநாதபுர சமஸ்தானத்தை கண்காணித்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நல்லவர்-களாக இருந்ததால், தாய்-தந்தை அற்ற பிள்ளையும் இளவரசனுமான பாஸ்கர சேதுபதியை நல்ல வண்ணமாக வளர்த்தனர்.

சமஸ்தான நிருவாகம், தற்காப்பு உள்ளிட்ட போர்க்கலை, சைவ சமய அறிவு உள்ளிட்ட அனைத்தையும் முறையாகக் கற்றுவித்தனர். ஆனால், எல்லாமும் ஆங்கில வழியாக நடைபெற்றது.

தாய்மொழி தமிழைவிட ஆங்கிலத்தில் புலமைபெற்ற பாஸ்கர சேதுபதியின் சைவ சொற்பொழிவைக் கண்டு, ஆங்கிலேயர்களில் ஒரு சிலர் சைவத்-தின் பக்கம் கவரப்பட்டனர்.

தேவாலயத்திற்கு வழிபட சென்றால், ஒரு மெழுகுவர்த்தி வேண்டும்; சைவ சமயத்தில் அதுகூட தேவையில்லை. அம்மையே-அப்பா என்று அன்னை உமையவளையும் உமையொரு பாகனான பரமனையும் தூய்மையான உள்ளத்தோடு துதிக்கும் முகமாக நாயன்மார் பெருமக்கள் வகுத்த திருமுறைப் பாடல்களை பாடினாலேப் போதும்;

அதுகூட தேவையில்லை; அடியார்க்கு தொண்டு செய்தாலேப் போதும். தொண்டர்க்கு தொண்டராக விளங்கிய அடியாரை ஆட்கொள்ள சிவபெருமானே இந்தப் பூமிக்கு வந்ததாக சைவ அடியார்களின் வாழ்க்கை முறை சுட்டுகின்றன. பரிகார பூசனை எதுவும் இல்லாத சைவம், எத்தனையோ ஆங்கிலேயர்களைக் கவர்ந்தது என்பது உண்மை. ஆனால் இன்றைய இந்து சமய வழிபாடு பணக்கார வழிபாடாக உருமாற்றம் கண்டுள்ளது.

ஆங்கிலேயரிடம் பயிற்சிபெற்ற பாஸ்கர சேதுபதி, எதிர்பார்த்ததைக் காட்டிலும் 18 வயதுக்கு முன்பே அரியனை அமர தகுதிபெற்றதால், இராமநாதபுர சமஸ்-தானத்தின் மன்னராக பட்டம் சூட்டப்பட்டார்.

அதேவேளை, தமிழ் வளர்ச்சிப் பணிகளிலும் அதிக அக்கறைக் காட்டிய மன்னர் சேதுபதி, மதுரையில் நான்கா-வது தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பாண்டித்துரைத் தேவருக்கு பக்கபலமாக இருந்தார். 1901-இல் தோற்றுவிக்கப்பட்ட இந்தச் சங்கத்திற்கு ஏராளமாக நிதி அளித்தவர், சேதுபதி மன்னர்.

இத்தகைய சூழலில்தான், 1893இல் உலக சமய பாராளுமன்றக் கூட்டம் சிக்காகோவில் நடைபெற்றபொழுது, அதில் கலந்துகொள்ளும்படி மன்னர் பாஸ்கர சேதுபதிக்கும் அழைப்பு வந்தது. அப்படிப்பட்ட அழைப்பு, பிரிட்டிஷ் இந்தியாவில் இவர் ஒருக்குத்தான் வந்தது.

ஆனாலும், அதில் கலந்துகொள்ள சேதுபதி மன்னர் தயங்கினார். விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது; இராமநாத சமஸ்தானத்திற்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புக் குழுக்கள் உருவாகி இருந்தன; எல்லாவற்றுக்கும் மேலாக, சின்ன வயதிலேயே இனிப்பு நீர் நோய்ப் பாதிப்பும் இவருக்கு ஏற்பட்டிருந்தது.

இத்தனை நெருக்கடிகளை எதிர் கொண்டு, மாதக் கணக்கில் கப்பல் பயணம் செய்வது ஆபத்தாக முடியலாம் என்று அவதானித்ததன் அடிப்படையில்-தான், சிக்காகோ பயணத்தைத் தவிர்க்கும் முடிவில் இருந்தார் மன்னர் சேதுபதி.

அந்த நேரத்தில்தான், இளைஞர் விவேகானந்தர் நாடு முழுவதும் இளைஞர்களை சந்திக்கும் எண்ணத்-தில் சுற்றுப் பயணம் மேற்கொடிருந்தார். இதைப் பற்றி அறிந்த மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தரை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்.

விவேகானந்தரின் சொல்லிலும் செயலி-லும் நம்பிக்கை கொண்டு, சிக்கா-கோவில் இருந்து தனக்கு வந்த அழைப்பிதழை வீணாக்க விரும்பாமல், அந்தக் கடிதத்தை விவேகானந்தரிடம் கொடுத்து, அதற்கான சான்று கடித்தத்-தையும் அரண்மனை முத்திரையுடன் கொடுத்து, பயணச் செலவிற்கு பொருளும் வழங்கினார்.

விவேகானந்தரும் சேதுபதி மன்னரின் பரிந்துரையை ஏற்று, சிக்காகோ பயணமானார். இணைய வெளியில் விவேகானந்தரைப் பற்றிய தகவலில், இந்த உண்மைச் சம்பவமெல்லாம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. தமிழ் நாட்டின்-இந்தியாவின் பிராமண ஊடகங்களும் இவற்றை மறைத்து வருகின்ற நிலையில், கலையமுதன் போன்றவர்களும் விவேகானந்தரைப் பற்றி பேசிவிட்டு, அவரை உலகிற்கு அறிமுகப்படுத்திய பாஸ்கர சேதுபதி மன்னரை அடியோடு மறைப்பது, இன துரோகம்.

விவேகானந்தரினும் மிஞ்சிய வல்லமை சேதுபதி மன்னரிடம் இருந்தது; இன்று , தமிழக மீனவர்களின் வாழ்க்கையில் கொள்ளியாக மாறிவிட்ட கச்சத் தீவு, இராமநாதபுர சமஸ்தானத்திற்குச் சொந்தமானது.

தவிர, புல்-பூண்டு-புழு-பூச்சி-ஆடு-மாடு-பன்றி யென்றெல்லாம் 17 பிறப்பெடுத்த பின்னர், 18-ஆவதாக வாய்ப்பதுதான் மனிதப் பிறவி என்று, நேற்று தான்ஸ்ரீ சோமா அரங்கத்தில் பேசினார் கலையமுதன்.

முப்பது கோடி முகமுடையாள்; ஆயினும் சிந்தை ஒன்றுடையாள் என்று பாரதி பாடினார். 1920-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி பேர் மட்டுமே; ஆயினும் இவர்கள் அனைவருக்கும் விடுதலை என்னும் ஒற்றை சிந்தனைதான் உள்ளது என்ற பொருளில்தான் அந்த விடுதலைக் கவி அவ்வண்ணம் பாடினான்.

இப்பொழுது இந்தியாவின் மக்கள் தொகை 144 கோடி பேர்; அப்படியானால், இடைப்பட்ட இந்த 105 ஆண்டுகளில் கூடுதலாக உருவான 114 கோடி பேரின் உயிர்கள் உற்பத்தி ஆகும் இடம் எங்கே என்பதை கலையமுதனால் சொல்ல முடியுமா?

உலகில் உள்ள அத்தனை மதங்களும் இந்தியாவில் உள்ளன; இஸ்லாமும் கிறித்துவமும் வந்த சமயங்கள்; இருந்த சொந்த சமயங்கள் ஏராளம்; ஆசீவகம், சமணம், பௌத்தம், சைவம், கொற்றவை வழிபாடு, வைணவம், திருமுருக வழிபாடு, சூரிய வணக்கமுறை, கணபதியம், சிறுதெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, சுடுகாட்டு காட்டேறி வழிபாடு, பாம்பு புற்று வழிபாடு, அனுமன்-ஐயப்பன் வணக்க முறை, சனிக் கோள் வழிபாடு உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு முறையைச் சேர்ந்தவர்களும் 17 பிறவியைக் கடந்துதான் மனிதப் பிறவியை எட்ட முடியுமா? இதற்கு கலையமுதனிடம் விளக்கம் உண்டா?

2004 டிசம்பர் 26-இல் ஆசிய மண்டலத்-தில் ஏறக்குறைய 2இலட்சத்து 20ஆயிரம் பேர் இரவோடு இரவாக உறக்கத்தில் மடிந்தார்களே, அந்த உயிர்களுக்-கெல்லாம் என்ன கணக்கு-வழக்கு என்பதை கலையமுதன் சொல்வார?

கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் திடீரென துப்பாக்கி ரவைகளுக்கு பலியாகி, காஷ்மீரத்து மண்ணில் சரிந்தார்களே 28 பேர், அந்த உயிர்களின் நிலை என்னவென்று கலையமுதன் சொல்ல முடியுமா?

ஆண்டுக் கணக்கில் தொடரும் ரஷ்ய-யுக்ரேனியப் போர், காஸா முனை அக்கிரமம், இப்பொழுது இஸ்ரேல்-ஈரானியப் போர்களின் விளைவாக அன்றாடம் உயிர்ப் பிரிகிறதே அந்த உயிர்களின் நிலையென்னவென்று கலையமுதனால் சொல்ல முடியுமா? இந்த உயிர்களின் அடுத்தக்கட்டம் என்னவென வரையறுக்க முடியுமா கலையமுதனால்?

இவை எல்லாவற்றையும் விட, அண்மைய காலத்தில் கொரோனா நச்சுயுரி தாக்குதலுக்கு ஆளாகி உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் எல்லா சமயங்களையும் சேர்ந்தவர்கள்- உலகத்தின் எல்லா பாகங்களிலும் மடிந்தார்களே அத்தனை மனிதர்களும் பன்றி உருவத்தை எல்லாம் கடந்துதான் மனித உருவத்தை எட்டினார்களா? அப்படி மடிந்த கோடிக்கணக்கான ஆன்மாக்களின் இன்றைய நிலை என்னவென்று கலையமுதனால் சொல்ல முடியுமா?

என்ன பேச்சு இதெல்லாம்? ஒரு பட்டிமன்ற நடுவர் பேசுகின்ற கருத்தா இதெல்லாம்?

ரெ.கோ. ராசு, எஸ்.பி.மணிவாசகம் போன்றோர், இனி முனைவர் கலையமுதனை பட்டிமன்ற நடுவர் என்பதற்குப் பதிலாக, ஆன்மிகப் பேச்சாளர் என்று விளம்பரம் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

தவிர, போகிறபோக்கில் பகுத்தறிவாளர்-களை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்-கள் என்றும் குழப்பமானவர்கள் என்றும் பேசிய கருத்து கண்டிக்கத்தக்கது; மிகவும் கண்டனத்திற்குரியது.

எந்தப் பகுத்தறிவுவாதி எங்கே என்னக் குழப்பத்தை விளைவித்தான்?

இந்தப் பூமியில் நேர்கின்ற அத்தனை அக்கிரமங்களையும் அட்டூழியங்-களையும் செய்வது மதவாதிகள்தான். இந்த உலகில், கோடிக்கணக்கான பகுத்தறிவாளர்கள் வாழ்ந்தனர்; வாழ்கின்றனர்; இந்தப் பகுத்தறிவாளர்-களில் ஒரேயொருவராவது இன்னொரு உயிருக்கு ஆபத்து விளைவித்தனர் என்பதை கலையமுதனால் சுட்டிக்காட்ட முடியுமா?

கோயில் உண்டியல் கணக்கை மறைப்பது, வைரம் பதித்த தங்கவேலை கூட்டாகத் திருடுவது; கணக்கு கேட்ட அதிகாரியை கூட்டுசேர்ந்து கொலை செய்வது; ஆலய நிருவாகத்தில் குடும்ப உறுப்பினர்களையும் சாதிக்காரர்களை-யும் உறுப்பினராக்கிக் கொள்வது; பதவிக்காக சண்டையிட்டு காவல் நிலையத்திலும் அரசாங்கத்திலும் புகார் அளிப்பது, கர்ப்பக்கிரகத்தில் உள்ள பொற்சிலைகளைக் கடத்துவது, வழிபாட்டு அம்மன் சிலையில் இருக்கும் பொன்னாபரத்தைத் திருடுவது, எடுத்து மறைத்து அடகு வைப்பது, கருங்கல் சிலையாக இருந்தால் பெயர்த்துவிட்டு அடியில் இருக்கும் ஐம்பொன் தகடுகளைத் திருடுவது போன்ற இழிச்செயல்களை செய்வதெல்லாம் பகுத்தறிவாளர்களா?

செய்யும் அத்தனையும் பக்திப் பழங்கள் என்பது, எல்லாம் தெரிந்த ஏகாம்பரனைப் போல பேசுகின்ற கலையமுதனுக்கு ஏன் எட்டவில்லை?

பட்டிமன்ற பேச்சாளர் என்றால் எதை யோப் பேசிவிட்டு போங்கள்; பார்வை-யாளர்கள் சிரிக்கவில்லையா? கைத்தட்டவில்லையா? கேட்டுப் பெறுங்கள்; கவலையில்லை.

ஆனால், போகிறபோக்கில், சந்தடி சாக்கில் பகுத்தறிவாளர்களை காரணமின்றி பழிக்கும் போக்கை, எவராயினும் இந்தமட்டில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை