Sunday, May 31, 2026

வல்லமை தாராயோ! சிரிப்பும் சிந்திப்பும் சந்தித்த இலக்கிய நிகழ்ச்சி

நீண்ட இடைவெளிக்குப் பின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கம் நேற்று ஜூன் 19, வியாழக்கிழமை முன்னிரவு குதூகலித்தது.

தன்முனைப்புச் சுடர் ரெ.கோ. ராசு, எஸ்.பி. மணிவாசகம், எம்.புஷ்பாகரன் ஆகியோரின் பெருமுயற்சியில் தமிழக பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் எஸ்.டி. கலையமுதன் உரை நிகழ்த்திய அந்த இலக்கிய மாலையில், ஏறக்குறைய அரங்கு நிறைந்த கூட்டம், நிகழ்ச்சியின் கடைசி நிமிடம்வரை கட்டுண்டு இருந்ததே அதற்கு தக்க சான்று.

வல்லமை தாராயோ என்னும் மாகவி பாரதியின் பொன் வரியை தலைப்பாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது

இந்தியா விடுதலை அடைந்தது 1947இல்; ஆனால், அதற்கு 27ஆண்டுகளுக்கு முன்னமே.. .,

“ஆடுவோமே பள்ளு பாடுவோமே;
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்; என்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே”

என்று எந்த துணிச்சலில் அந்த முண்டாசுக்கவி பாடினான்?. தன் உள்ளத்தே எந்நேரமும் துளிர்விட்டுக்-கொண்டிருந்த வல்லமை எண்ணமும் எழுச்சியும்தான் அந்த தொலைநோக்குச் சிந்தனையை அடித்தாடும் விதமாக அந்த விடுதலைப் பாவலனை பாடவைத்தது.

கல்வியாளர் ம. மன்னர்மன்னன், தமிழ்ச் சொல் விளையாட்டை மையப்படுத்தி ஆற்றிய சிற்றுரை, தமிழின் வல்லமையை சிரிப்புடனும் சிந்திப்புட-னும் எடுத்துக் காட்டியது;

மன்னர் காலத்து சோழ மண்டலத்தில், நீண்ட தூர கால்நடைப் பயணத்தால் களைப்பு மேலிட்ட புலவர் பெருமக்களில் மூத்தவரான ஒருவர், தெருவில் விளை-யாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் “சோறு எங்கே விக்கும்?(சோறு விற்கப்-படும் அல்லது கட்டணமின்றி வழங்கப்-படும் சத்திரம் இருக்குமிடம் எங்கே என்னும் பொருளில்) என வினவியதும்,

சிறுவர்க் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு துடுக்கான பொடியன் சட்டென “சோறு தொண்டையில் விக்கும்” என்று சொன்னதுடன் கொல்’லென சிரித்தும்விட்டு ஓட, சுற்றி இருந்த ஏனைய சிறாரும் சிரித்துவிட்டு, அவர்களின் விளையாட்டில் கவனம் செலுத்தினர்.

சோழ மண்டலத்து சிறுவர்களின் தமிழ் விளையாட்டை, அது துடுக்கான தன்மையில் இருந்தாலும் அவர்களின் தமிழ்ப் புலமை, மிடுக்கான சிலேடைப் பேச்சைக் கேட்டு பசி மறந்தவர்களாக சற்று தடுமாறியபோது, அருகில் இருந்து அவதானித்த சற்று பெரிய சிறுவன் தானாக வந்து,

“ஐயரீர், இன்னும் கால் காத தொலைவில் காளிகாம்பாள் கோயிலும் அதையொட்டி அன்ன சத்திரமும் இரண்டனுக்கும் எதிரே தாமரைக் குளமும் உள்ளன; நீங்கள் யாவரும் அங்கு சென்றால், உங்கள் பசிப்பிணி உடனே தீரும்’ என்றதுடன்,

“சற்றுப் பொறுங்கள்” என்று அப்புலவர்க் கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்ட அச்சிறுவன், அருகில் இருந்த அல்லிக் குட்டைக்கு ஓடி, ஏழெட்டு அல்லிக் காய்களை காம்புடன் பறித்துவந்து கொடுத்து, இடையில் இதைச் சாப்பிடுங்கள்; தாகமும் பசியும் தற்காலிகமாக தணியும் என்றானாம்.

இதுபோன்று, இக்கால தமிழ்ச்சொல் விளையாட்டுக்களைச் சொல்லி அரங்கத்தினரை மகிழ்வித்தார் கல்வியாளர் மன்னர் மன்னன்.

தொடர்ந்து, ஒன்றே முக்கால் அடி திருக்குறளைப் போல சுறுங்கப் பேசிய டத்தோஸ்ரீ மு. சரவணன்,

“இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த மாகவி பாரதியாரை வளைக்க பிரிட்டீஷ் காவலர்கள் வலைவிசிய அதேநேரத்தில், புதுச்சேரியை ஆண்டு கொண்டிருந்த பிரெஞ்சு நிர்வாகமும் இவரைக் கைது செய்ய முனைப்புக் காட்டியது; இத்தணைக்கும் நடுவே, வீட்டில் அடுப்புக்கு விறகில்லை; உலைக்கு அரிசி இல்லை; இருந்தாலும், “எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா?” என்று செம்மாந்து பாடினான். இதுதான், அவன் வல்லமைக்கு சான்றெனப் பேசினார்.

தொடர்ந்து பேசிய முனைவர் கலையமுதன், காணி நிலம் கேட்டு, பராசக்தியிடம் கோரிக்கை வைத்த மாகவியிடம் வெளிப்பட்டது வல்லமை; “நான் நிரந்தரம் ஆனவன்; எந்த நிலையிலும் எனக்கு அழிவில்லை” என்று சொன்ன கவியரசு கண்ண-தாசனிடம் குடிகொண்டிருந்தது இயல்பான வல்லமை; “நீ என்னை மணக்காமல், ஒருவேளை, உன் பள்ளித் தோழனை மணந்திருந்தால் என்னவாக இருப்பாய்” என ஹிலாரி கிளிண்டனைப் பார்த்து, அமெரிக்காவின் மேநாள் அதி-பர் பில் கிளிண்டன் கேட்டதும், சற்றும் தாமதியாமல், “நான் இப்படியேத்தான் இருந்திருப்பேன்; ஆனால், எந்த என் நண்பன் அமெரிக்க அதிபராக ஆகி-யிருப்பான்” என்று மின்னல் பதில் சொன்ன ஹிலாரியிடம் இருந்தது வல்லமை என்றெல்லாம் பேசிய, முனைவர் கலையமுதன்,

தனக்கேயுரிய பாணியில் குடும்பப் பாங்கான முறையில் நகைமிக பேசினார்.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிரு-வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன் முன்னிலை வகித்த இந்த நிகழ்ச்சியில், சடையப்பர் என்று சரவணன் புகழ்ந்த டத்தோ புத்ரி ஏ.பரமசிவம் உள்ளிட்ட பிரமுகர்கள், பொதுமக்கள் என கலந்துகொண்ட அனைவரும் மனதார சிரித்து மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சி நிறைவுற்றபின், நிறைந்த நெஞ்சத்துடன் இல்லம் திரும்பினர்.

கலையமுதன், அடிக்கடி கைத்தட்டலை கேட்டுப் பெற்றதுதான், சற்று நெருடலாக இருந்தது.

தமிழர்கள் இயல்பாகவே, கைத்தட்டு-வதில் கைதேர்ந்தவர்கள்; தொட்டதெற்-கெல்லாம சளைக்காமல் கைத்தட்டும் தமிழர்களிடம், கைத்தட்டலை கேட்டுப் பெறவேண்டுமா என்ன?

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை