Monday, April 20, 2026

பத்து கஜா நாடாளுமன்றத் தொகுதி சேவை மைய ஏற்பாட்டில் கல்விக் கண்காட்சி

கல்விக் கண்காட்சியை பார்வையிட்ட எம்பி வி சிவகுமார்

இந்திய சமுதாய உயர்க்கல்வி மாணவர் நலம் மற்றும் எதிர்காலம் கருதி ஜூன் 14, 2025 அன்று பத்து கஜா நாடாளுமன்ற சேவை மையத்தால் ‘ஏயோன் பிக் ஃபாலிம்’ வளாகத்தில் கலவிக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டது.

பள்ளிக் கல்வியை இடைநிறுத்திய-வர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாடு-களில் தங்கள் மேற்படிப்பை மேற்-கொள்ள விரும்புபவர்களுக்கு உதவுவதும் உரிய ஆலோசனை வழங்குவதும் இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்த நிகழ்வில், பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உட்பட 15 உயர்கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன; அவை பரந்த அளவிலான கல்வி மற்றும் TVET (தொழில்நுட்பம், தொழிற்கல்வி மற்றும் பயிற்சி) திட்டங்களை வழங்குகின்றன.

ஏராளமான மாணவர்களும் பெற்றோரும் இதில் கலந்து கொண்டனர். நாள் முழுவதும் நடைபெற்ற இந்தக் கல்வி கண்காட்சியில் சுமார் 800 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கண்காட்சியைப் பார்வையிட தனக்கும வாய்ப்பு கிடைத்தது என்று தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் தெரிவித்தார்.

இதில் ஈடுபாட்டுடன் தங்கள் பங்களிப்பை நல்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் உற்சாகத்தையும் ஈடுபாட்டையும் கண்டு மகிழ்ச்சி அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உரிய தகவலையும் வழிகாட்டுதலையும் வழங்கிய நிறுவனங்களுக்கு தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார் சிவக்குமார்.

இந்தக் கண்காட்சி, ஏதோ ஒரு வகையில், பத்து காஜா தொகுதியில் உள்ள மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் தொழில் விருப்பங்களை உணர்ந்து கொள்வதிலும் ஒரு படி மேலேசெல்லவும் உதவியுள்ளது என்று நம்பு வதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை