
கொரோனா பருவத்தில் இயற்கை எய்திய சிறந்த கலைஞர் தங்கக் குரலோன் தங்கமணியின் மூத்த பெயரனும் கண்மணியின் மகனுமான லட்சுமண் காலமானதாக டாமன்சாரா தொழில்முனைவர் சி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
எட்டு வயதான லட்சுமணனின் தாய் கண்மணி தந்தை முரளிதரன் பாட்டியும் தங்கமணியின் மனைவியுமான மல்லிகா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் காய்ச்சல் காரணமாக மரணம் அடைந்த லட்சுமணுக்கு நாளை ஜூலை 23 பகலில் இறுதி மரியாதை செய்யப்பட்டு தொடர்ந்து 1:00 மணியிலிருந்து பிற்பகல் 2:30 மணி வரை பூச்சோங் 14- ஆவது மைல், பண்டார் பூச்சோங் உத்தாமா, ஜாலான் பூங்கா கெர்தாஸ் மின் சுடலையில் உடல் எரியூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக சி. இளஞ்செழியன் மேலும் தெரிவித்துள்ளார்.


