
தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறை, சைவ நெறி. பரிகாரத்திற்கு இடம் இல்லாத உண்மையான இறை அன்பையும் ஆன்மீக நன்னெறியையும் வெளிப்படுத்துகின்ற சமயக் கொள்கை இது.
இத்தகைய சிவ நெறியையும் தமிழிய பண்பாட்டையும் ஒருசேர மலேசியத் தமிழர்களிடம் இடையறாது வளர்த்து வருகின்ற சமய அமைப்பு, மலேசிய சைவ நற்பணி கழகம்
இத்தகைய மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் சார்பில்
திங்கள்தோறும் நடைபெறும்
தமிழ்ச் சைவ சமயச் சொற்பொழிவு எதிர்வரும் 3.8.2025 ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், துன் சம்பந்தன் மாளிகை, தான்ஸ்ரீ சோமா அரங்கில், காலை மணி 10:00 அளவில் நடைபெறவுள்ளது.
இம்முறை நம்பி ஆரூரர் ஆசான் பூசனையாக நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் தலைவர் திருமுறைச் செம்மல் சித்தாந்த இரத்தினம் முனைவர் தர்மலிங்கம் நடராசன், நம்பி ஆரூரர் திருப்பாட்டு எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.

கழகத்தின் செயலாளர் நிறைமலி அகல்யா தர்மலிங்கம், ஆடித் திங்களின் சிறப்பு என்னும் தலைப்பில் மற்றொரு உரை நிகழ்த்துவார்.
அரிய சமய உண்மைகளையும் வாழ்வியல் கூறுகளையும் அறிவதற்கும் அதனைப் பின்பற்றுவதற்கும் அவற்றை எதிர்காலத் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கவும் இந்நிகழ்ச்சி வழிகோலாக அமையும். சிந்தனைக்கும் செயலுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய இந்நிகழ்ச்சியில் தமிழ்ச் சைவ சமய ஆர்வலர்கள் தமிழர் பண்பாட்டு உடையோடு தங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு பயன் அடைய அழைக்கப்படுகின்றனர். கட்டணம் இன்றி நடத்தப்பெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படும். மேற்தெரிவலுக்கு 0123277061 அல்லது 0122340470 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் தொடர்புக்கு darmamsnk@yahoo.com.


