
இன்று ஆகஸ்ட் திங்கள் 31 ஆம் நாள் நாட்டின் 68 ஆவது விடுதலை நாள் கொண்டாடப்படும் வேளையில் நாட்டு மக்களிடையே தேசிய உணர்வு உச்சத்தில் இருக்கிறது
இத்தகைய சூழலில் பினாங்கு பன்னாட்டு விமான நிலையத்தின்வழி பயணம் மேற்கொள்ள வருகின்ற பயணியர் அனைவருக்கும் விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில் தேசியக்கொடி வழங்கப்பட்டது.
பினாங்கு விமான நிலையம் பன்னாட்டு முனையமாக இருக்கிற சூழ்நிலையில் இங்கு வருகின்ற வெளிநாட்டு பயணிகளும் நாட்டின் தேசிய கொடியை இன்முகத்துடன் பெற்று கையில் ஏந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அந்த வகையில் கப்பல் வழிகாட்டு அதிகாரியாக பணிபுரிகின்ற மகேன் முருகப்பிரகாசம் தென்கொரியாவிற்கு பயணம் மேற்கொண்ட வேளையில் அவருக்கும் தேசியக் கொடியை வழங்கிய இரு அதிகாரிகள் அவருடன் படம் எடுத்து மகிழ்ந்தனர்
பயணியர் கண்காணிப்பு அதிகாரி நோர்ஹனீஸ், Cathey Pacific விமான நிறுவனத்தின் மேலாளர் அஃபிஃப் இருவரும் பயணியர் அனைவருக்கும் ‘ஜாலூர் கெமிலாங்’ என்னும் நாட்டுக் கொடியை வழங்கி மகிழ்ந்தனர்.


