Tuesday, February 17, 2026

காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் மெர்டேக்கா தின ஓட்டம்!

கோலாலம்பூர், செப் 1-
Seri Hartamas இடைநிலை பள்ளியில்நேற்று மெர்டேக்கா தின ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைக்க காசிங் ரேஞ்சர்ஸ் கிளப் அழைத்ததில் பெருமைப்படுகிறேன் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் தெரிவித்தார்.

நமது தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, தேசபக்தி மற்றும் விளையாட்டு உணர்வால் உந்தப்பட்ட பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்தது.

இளைஞர்கள் மற்றும் மூத்த பங்கேற்பாளர்கள் ஒன்றாக ஓடி, ஜாலூர் ஜெமிலாங்கை அசைத்து, நம் அன்புக்குரிய நாட்டின் சுதந்திரத்தை ஒற்றுமையுடனும் ஆற்றலுடனும் கொண்டாடுவதைப் பார்ப்பது உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக இருந்தது.

இந்த மெர்டேக்கா ஓட்டத்தை வெற்றிபெறச் செய்த ஏற்பாட்டாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றயைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் தலைவர் வி.எஸ். வேல் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஓட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பை சக்ரவர்த்தி கோபால் தொடங்கினார்.

மலை ஏறுதல் மற்றும் பேட்மிண்டன் போட்டிகளில் ஆர்வம் செலுத்திய காசிங் ரேஞ்சர்ஸ் கிளப் இப்போது டார்ட்ஸ் மற்றும் ஓட்டத்திலும் கால் பதித்துள்ளது.

காசிங் ரேஞ்சர்ஸ் கிளப் ஹவுஸ் கட்டட நிதிக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி வருகிறோம்.

இது எங்கள் சங்கத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் சொன்னார்.

அதேவேளை அதிகமான இளைஞர்களையும் கிளப்பில் இணைத்த வண்ணம் உள்ளோம்.

எதிர்காலத்தில் அவர்கள் இந்த கிளப்பை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் சொன்னார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை