Monday, April 20, 2026

பினாங்கு இந்து இயக்கமும் (PHA) பினாங்கு கல்வித்துறையும் (JPN) இணைந்து ஏற்பாடு செய்த எஸ்பிஎம் தமிழ் இலக்கியப் பட்டறை-2025!

‘எஸ்பிஎம் தமிழ் இலக்கியப் பட்டறை 2025’ என்ற தலைப்பில்
25 அக்டோபர் 2025 (சனிக்கிழமை) அன்று காலை 8:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை நடைபெற்றது
. இப்பணிமணைப்பட்டறை பினாங்கு கல்வித்துறை மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் பினாங்கு இந்து இயக்கமும் (PHA) இணைந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

திறப்பு விழாவை பினாங்கு இந்து இயக்கத் தலைவர் டத்தோ பி. முருகையா தலைமை தாங்கி ஆற்றிய உரையில், மாணவர்கள் மன அழுத்தத்தைச் சமாளிக்கும் வழிகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும், கடந்த ஆண்டு எஸ்பிஎம் தமிழ் இலக்கியத் தேர்வில் பினாங்கு மாநிலம் 98% தேர்ச்சி விகித்தைப் பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டில் கல்வித்துறை மற்றும் பினாங்கு இந்து இயக்கம் இணைந்து 100% தேர்ச்சி இலக்கை அடைவதற்காக ஆசிரியர்கள், மாணவர்களுடன் இந்து இயக்கமும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து,பினாங்கு கல்வித்துறை, தமிழ் மொழிப் பிரிவின் துணை இயக்குநர் லோகநாதன் கலந்து கொண்டு
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பற்றி உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்டக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தார். மேலும், தமிழ்க் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து வழங்கி வரும் பினாங்கு இந்து இயக்கத்தின் ஆதரவுக்கும் பங்களிப்பிற்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

மொத்தம் 22 பள்ளிகளில் இருந்து 120 ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இந்தப் பணிமணைப்பட்டறையில் கலந்து கொண்டனர்.
இந்த பயனுள்ள நிகழ்ச்சிக்கு மாணவர்களை அனுப்பிய அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தப் பணிப்பட்டறை மாணவர்களுக்குப் பெரும் பயனளித்தது. எனவே, இத்தகைய பணிமணைப்பட்டறைகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து நடைபெற வேண்டும். இது இந்திய மாணவர்களிடையே தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை ஊக்குவிக்கும் சிறந்த தளமாக விளங்குகிறது.

தகவல்: செ வே முத்தமிழ் மன்னன்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை