
கோலாலம்பூர் டிச. 09:
கின்னஸ் சாதனை எழுத்தாளர் பிரேம் ராவத் எழுதிய ‘Hear Yourself’ ஆங்கில நூல், தமிழில் மொழிமாற்றம் செய்யபட்டு, இரைச்சல் மிகுந்த உலகத்தில் நிம்மதியைக் காண்பது எப்படி-‘உள்ளத்தின் குரல்’ நூல் நூற்கடல் என சொல்லத்தகும் ஜெயபக்தி பதிப்பக அரங்கத்தில், டிசம்பர் 08-ஆம் நாள் வெளியிடப்பட்டது.
பிரேம் ராவத் சமூகப் பாங்குடன் எழுதிய இந்த நூல் செப்டம்பர் 14-இல் வெளியீடுகண்ட இரண்டு வாரங்களிலேயே நியூயார்க் டைம்ஸ் இதழின் அதிக விற்பனை நூல் பட்டியலில் இடம் பெற்றது.
அதன் பிறகு, தமிழ், ஜப்பான், கொரியா உள்ளிட்ட 16 மொழிகளில் இப்புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டது. 2023 ஏப்ரல் 2-இல், இந்தியாவின் லக்னோ நகரில் நடைபெற்ற ஒரு வரலாற்று நிகழ்வில், மொத்தம் 114,704 பங்கேற்பாளர்களுடன் பிரேம் ராவத், இந்தப் புத்தகத்தின் ஹிந்தி பதிப்பின் மூலம் அதிக பார்வையாளர்களுக்கான கின்னஸ் உலக சாதனை படைத்தவராக அறிவிக்கப்பட்டார்.
‘உள்ளத்தின் குரல்’ என்ற தலைப்பில் புத்தகத்தின் தமிழ் பதிப்பு இந்த ஆண்டு செப்டம்பரில் உலகளவில் வெளியிடப்பட்டது.அந்த வகையில் சிறந்த மதிப்புரைகளோடு கோலாலம்பூரில் ஜெயபக்தி மண்டபத்தில் இப்பொழுது, வெளியிடப்பட்டது.
டத்தோ படுக்கா டாக்டர் சாந்தா குமாரி தலைமையில் இந்த புத்தக வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மலேசிய எழுத்தாளர் கோ.புண்ணியவான் மற்றும் டாக்டர் சிவா அண்ணாமலை ஆகியோர் இந்த நூலில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து விரிவாக பேசினர்.

டத்தோ படுக்கா டாக்டர் சாந்தா குமாரியிடம் இருந்து குயில் ஜெயபக்தி நிறுவனத்தின், அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார். இந்நூல், ஒரு பயணத்தின் ஆரம்பம். பிரேமின் விவேக சிந்தனையின் வெளிப்பாடாக இந்த நூல் மலர்ந்துள்ளது.
வலுவான நுண்ணறிவு மற்றும் ஆர்வமிகு கதைகளால் நிரம்பியுள்ள ‘உள்ளத்தின் குரல்’ நூலைப் படிப்பவர்தம் வாழ்க்கை மற்றும் சுற்றியுள்ள-வர்களைப் பற்றிய புரிதலையும் ஏற்படுத்தும். 1957-ஆம் ஆண்டில் இந்தியாவிம் வடபகுதியில் டேராடூம் என்ற இடத்தில் பிறந்த பிரேம் ராவத், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய-சமூகவியல் அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்; தற்பொழுது, அமெரிக்காவில் வசிக்கும் இவர், சொந்த அறக்கட்டளைவழி தொடர்ந்து சமூக வீதியில் பயணிக்கிறார்
ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய நாடாளுமன்றம், இத்தாலிய செனட் சபை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் நாடாளுமன்ற கூட்டங்கள், முந்நிலை பல்கலைக்கழகங்கள், வணிக மாநாடுகளில் எல்லாம் உரையாற்றுவதற்கு பிரேம் ராவத் அழைக்கப்-பட்டுள்ளார்.

பிரேம் ராவத் ஆற்றிய உரைகள், பதிவு செய்யப்பட்டு அவரின் ஊடக தளத்தில்-TimelessToday(www.timelesstoday.tv) விரவிக்கிடக்கின்-றன. மலேசியாவில், பிரேமின் வேர்ட்ஸ் ஆஃப் பீஸ் டிவி தொடர் என்ற தலைப்பில் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இது தொடர்பான மேல் விவரத்திற்கு, பி.ஜெகதீசனைத் தொடர்பு கொள்ளலாம்(தொலைபேசி எண்: 03-7783 9100; தொலைநகலி எண்: 03-7783 0100 & 012-973 8956)
பிரேம் ராவத் அறக்கட்டளை, அஞ்சல் பெட்டி எண்:24-1498, லாஸ் ஏஞ்சல்ஸ், CA 90024, அமெரிக்கா TPRF; மலேசியப் பிரதிநிதி: பிரைம் அகாடமி மலேசியா பெர்ஹாட் 4228, ஜாலான் 5/132, காசிங் இன்டா, 46000 பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர் டாருல் ஏசான்-primeacademymalaysia@gmail.com


