
ஷா ஆலம், டிச.10:
சிலாங்கூர் மாநிலத்தின் புதிய அரச நகரமான ஷா ஆலம், பிரிவு 16இல் அமைந்துள்ள அருள்மிகு புவனேசுவரி அம்மன் ஆலயத்தில் அபிராமி அந்தாதிப் பெருவிழா இவ்வாண்டின் நிறைவு நாளான டிசம்பர் 31-இல் பக்திப் பெருக்குடன் சிறப்பாக நடைபெற இருப்பதாக ஆலயத் தலைவர் கே.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் உள்ள அம்மன் வழிபாட்டுத் தலங்களில், இந்த அருள்மிகு புவனேசுவரி அம்மன் ஆலயத்தில்தான் அபிராமி அந்தாதி விழாவை மிகச்சிறப்பாக, ஆண்டுத் திருவிழாவைப் போல நடத்திவருகிறோம்.
இந்த ஆலயத்தில் நடைபெறும் அபிராமி அந்தாதி விழாவிற்கு, இது வெள்ளி விழா ஆண்டாகும்.

1995 முதல் ஆண்டுதோறும் நடைபெற்றுவந்த இந்த சக்தி வழிபாட்டு விழா, இடையில் ஏற்பட்ட சில சிக்கல் காரணமாக தடைபட்டது. ஆனாலும், வேறு ஆலயத்தில் அபிராமி அந்தாதி விழாவை நடத்திக் கொண்டிருந்தோம்.
ஆலய நிலச் சிக்கல் தீர்ந்ததும் மீண்டும் இதே அருள்மிகு புனவேசுவரி அம்மன் ஆலயத்தில் இந்த விழாவை ஆண்டுதோறும் சுற்று வட்டார பக்தர்களின் ஆதரவுடன் நிறைவேற்றி வருகிறோம். அந்த வகையில், நிகழும் 2024 ஆம் ஆண்டு விழா, வெள்ளி விழா அபிராமி அந்தாதி விழாவாகும்.
இந்த ஆலய வரலாற்றுக்கும் அபிராமி அந்தாதி விழாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தலைவர் சுப்பிரமணியன் மேலும் தெரிவிக்கிறார்.
(இதன் முழு விவரம் அடுத்தச் செய்தியில் இடம்பெறும்)


