Sunday, April 19, 2026

சபா மாநிலத்தின் 11-ஆவது ஆளுநர் துன் மூசா அமான்!

போர்னியோ மண்டலத்து இரு மாநிலங்களில் ஒன்றான சபாவின் அடுத்த ஆளுநராக துன் மூசா அமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமான ஆணையை இன்று, டிசம்பர் 17 காலையில் மாட்சிமைசால் மாமன்னர் இப்ராகிம் சுல்தானிடமிருந்து இருந்து அவர் பெற்றுக் கொண்டார். 2025 ஜனவரி முதல் நாள் முதல், நான்கு ஆண்டுகளுக்கு துன் மூசா அமான், அப்பதவியை அலங்கரிப்பார். தற்போதைய ஆளுநர் துன் ஜுஹார் மஹிருடின் பதவி காலம், வரும் 31-ஆம் நாள் நிறைவுபெறுகிறது.

சபா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான துன் மூசா அமானுக்கு 73 வயதாகிறது.

பிரதமருடன் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடிலா யூசுப், சபா முதல்வர் டத்தோஸ்ரீ ஹஜிஜி நோர் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை