
தாமரை வர்த்தகக் குழும இயக்குனர் வாரிய உறுப்பினரும் பெட்டாலிங் ஜெயா தாமரை நட்சத்திர உணவக கண்காணிப்பாளருமான டத்தோ ரெனா சுந்தரம் ‘நூற்றாண்டு காண்க!’ என்று குமரி வான் முற்றத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.

தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் பொன்விழா கண்டு, மணிவிழாவையும் நேற்றுடன் நிறைவு செய்து, இன்று ஜனவரி 6-ஆம் நாள் பவள விழாவை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ள டத்தோ ரெனா சுந்தரம், ‘நூற்றாண்டையும் ஏட்டுக!’ என்று குமரி நல்லாள் நெஞ்சார வாழ்த்துகிறாள்.

இளநகையும் மென்னகையும் மாறா திருமுகத்தைக் கொண்டிருப்பது பெரும்பேறாகும். அத்தகைய நற்பேறு வாய்க்கப் பெற்று, எந்நேரமும் இனிமை தாழா முகத்தோற்றத்துடனும் பொலிவு குன்றா வடிவத்துடனும் சுற்றி சுழன்று பெட்டாலிங் ஜெயா காசிங் சாலை தாமரை உணவகத்தை விழியை இமை காப்பது போல் தற்காத்து ஆளும் தலைசிறந்த நிருவாகி டத்தோ ரெனா சுந்தரம், இன்று தன்னுடைய அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் அதேவேளையில் 61-ஆவது வயதை எட்டுகிறார் இன்று!

இத்திருமகனார், பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்ந்து, தாமரையை அன்றாடம் மலரச் செய்யும்படி இயற்கை அன்னை துணை நல்கும்படி குமரி நல்லாள் மனதார விழைகின்றாள்.
வாழ்க டத்தோ ரெனா சுந்தரம்!
வளர்க தாமரை உணவகம்!!








