Sunday, April 19, 2026

நீடு வாழ்க டத்தோ சகாதேவனார்! குமரி வாழ்த்துகிறாள் !!

பல்லின மக்களும் பாங்குடன் வாழும் இம்மலைத்திருநாட்டின் மையப் பகுதியில், இந்திய சமுதாயத்தின் பேரடையாளமாகத் திகழும் துன் சம்பந்தன் மாளிகை எழுப்பிய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிருவாக இயக்குநரும் செயலாளருமான டத்தோ பா.சகாதேவன், தன் வாழ்க்கைப் பயணத்தில் இன்று இன்னொரு புத்தாண்டை எட்டுகிறார்.

இந்த நாளை, வகைதொகையின்றி இன்னும், இன்னும் ஏராளமாக எட்டி நீடூழி வாழவும் வாழ்வாங்குபுகழ் எய்தவும் குமரி நல்லாள் வாழ்த்துகிறாள்.

கடந்த நூற்றாண்டில், 1960-70ஆம் ஆண்டுகளில், இக்கூட்டுறவு சங்கம், சங்கடத்தை எதிர்கொண்டிருந்த நேரத்தில்,
அதை அடித்தளத்துடன் நிமிர்த்தி,
அயராது பாடாற்றி நேர்ப்படுத்தி,
நல்வகையால் வகைப்படுத்தி,
திண்ணிய செயலால் தொகைப்படுத்தி,
அகலக்கால் வைத்து மேம்படுத்தி,
மொழிவளர அறவாரியவழி சொற்படுத்தி,
பண்பாடு காக்க சமூகக் கலைப்படுத்தி

இற்றை நாளில் செம்மாந்து திகழ்கின்றதென்றால், தகைமைசால் தலைமைதான் அதற்குக் காரணம்.

கூட்டுறவு சங்கத்தின் சீரியத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரனார் என்னும் பெருமகனார் எள் என நினைப்பதற்குள் எண்ணெய்யாய் உருமாறும் வல்லார் டத்தோ பா. சகாதேவன்; இவர் மன்னருக்கு ஏற்ற தளபதி; அரசருக்கு உற்ற அமைச்சர்;

இத்தகையப் பாங்குடன் கூட்டுறவு சங்கம் உயர்ந்து நிற்பதால்தான், மலேசிய இந்தியர்களுக்கு சமூக-பொருளாதார-கல்வி-வர்த்தக தளங்களில் உதவிக் கரம் நீட்டும் உற்ற நண்பனாக இது விளங்குகிறது.

இந்த நிலை எக்காலமும் தொடர டத்தோ சகாதேவனாரின் இணைத்தலைமையும் நீடிக்க வேண்டும்; காலமும் தொடர வேண்டும்.

அதனால் டத்தோ பா.சகாதேவனார் நீடு வாழ்க, நெடிது நாட்டுக என்று மீண்டும் வாழ்த்துகிறாள் குமரி..!

இவ்வண்ணம்
குமரி வான்முற்றம்
கோலாலம்பூர்
21.12.2024

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை