–டத்தோ டாக்டர் லோக பாலா மோகன்

மலேசியாவில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தனது இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மக்கள் முற்போக்கு கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
“வரவிருக்கும் ஆண்டில் எல்லோருக்கும் வளம், நல்ல உடல்நலம் மற்றும் மகிழ்ச்சியை இறைவன் அருள வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்”.
பொங்கல் திருநாள், தமிழர் மாதமான ‘தை’ பிறப்பை குறிக்கும் புனித விழாவாகும். தை மாதம் செழிப்பு, நல்ல வளம் மற்றும் புதிய தொடக்கத்தைத் தரும் மாதமாகக் கருதப்படுகிறது.
இந்த மூன்று நாள் கொண்டாட்டம் பொங்கலுக்கு முன்நாள் நடைபெறும் போகியுடன் தொடங்குகிறது.
அன்றைய தினம் பழைய உடைகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் எரிக்கப்படுகின்றன.
இது ஒரு வழிபாட்டு முறையாக மட்டுமல்ல, நம்முள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை விட்டு விடுவதற்கான ஒரு அடையாளமாகவும் விளங்குகிறது.
ஒருவருக்கொருவர் கொண்டுள்ள வெறுப்பு, தீய எண்ணங்கள் மற்றும் தவறான அணுகுமுறைகளை எரித்து, ஒற்றுமையும் நேர்மறை சிந்தனையையும் ஏற்றுக்கொள்வோம்.
அன்பு, பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் மூலம் அனைவரையும் ஒன்றாக ஏற்றுக்கொண்டு, அனைவரையும் இணைக்கும் பண்பாட்டை வளர்ப்போம்.
பொங்கல் வெறும் செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டாடும் திருநாள் மட்டுமல்ல; அது நன்றியுணர்வை நினைவூட்டும் விழாவும்கூட.
அதேபோல், மகர சங்கிராந்தி பெரும்பாலான இந்தியர்களால் கொண்டாடப்படுகிறது.
இது சூரியன் தனு ராசியில் (சக்ரவர்த்தி) இருந்து மகர ராசிக்கு மாறும் நிகழ்வைக் குறிக்கும். இந்த விண்வெளி மாற்றம் சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வுடன் ஏற்படுவதால், இது சூரிய தேவன் சூரியனை நன்றிக்களிக்கும் விதமாக அர்ப்பணிக்கப்படுகிறது.
இந்தத் திருவிழா புதுமை, புதிய தொடக்கம் மற்றும் வளம் என்பவற்றின் சின்னமாகக் கொண்டாடப்படுகிறது.
நமது வாழ்விற்குத் தேவையான வளங்களை வழங்கும் இயற்கைக்கு நன்றி செலுத்துவதையே இது கற்றுத் தருகிறது.
அதேபோல நமது வாழ்க்கையில் முக்கிய பங்காற்றும் அனைத்து உயிரினங்களையும் மதித்து, இந்த வாழ்க்கை என்ற அற்புதமான பரிசுக்காக தினமும் ‘நன்றி’ கூறும் பழக்கத்தை வளர்ப்போம்.
இந்த நற்சிந்தனைகளுடன், அனைவருக்கும் மகிழ்ச்சியும் அருளும் நிறைந்த இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்ஏன்று டத்தோ டாக்டர் லோக பால மோகன் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


