
மலேசிய மக்கள் அனைவருக்கும் குறிப்பாக இந்து சமுதாயத்திற்கு அதனிலும் குறிப்பாக தமிழ்ச் சமுதாயத்திற்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக தாமரை வர்த்தக குழுமத்தின் தலைமை இயக்குனர் தான்ஸ்ரீ ரேனா துரைசிங்கம் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நிலைத்தன்மை, சீரான பொருளாதார வளர்ச்சி, கூட்டு சமுதாய மேம்பாடு, வர்த்தக வாய்ப்பு உள்ளிட்ட நன்மை யாவனும் வாய்க்கப் பெற்ற இந்தத் திருநாட்டில் வாழும் பேறு பெற்றமைக்காக மலேசிய மக்களாகிய நாம் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.
அறுவடை திருநாளின் வெளிப்பாடாக கொண்டாடப்படுகின்ற இந்த பொங்கல் திருநாள், அடிப்படையில் இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லுகின்ற விழாவாகும்.
அதைப்போல நாம் நலமாக வாழும் வகைக்கு நாட்டிற்கும் நன்றி சொல்ல வேண்டும்.
அந்த வகையில் எல்லா மக்களும் எல்லா நலனும் பெற்று குறிப்பாக வர்த்தக சமூகத்தினர் தங்களின் சவால்களை எதிர்கொண்டு வாழ்க்கையிலும் தொழிலிலும் முன்னேற்றம் காண இந்தப் பொங்கல் திருநாள் வழிகாணட்டும் என்று வர்த்தகப் பெருமகனார் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதைப்போல, கொடைநெஞ்சரும் தாமரை வர்த்தக குழுமத்தின் இயக்குனர் டத்தோ ரெனா ராமலிங்கம் தெரிவித்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில்
“நாடு நலம் பெற வேண்டும்; நாட்டில் வாழ்கின்ற பல இன சமுதாயமும் வளம்பெற வேண்டும்; குறிப்பாக மலேசிய இந்திய வர்த்தக சமுதாயம் தத்தம் தொழிலில் உயர்வு எட்டவும் மேம்பாடு காணவும் இந்த பொங்கல் நன்னாளில் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வர்த்தக சமூகத்தினர் தாங்கலும் வளர்ந்து அதன்வழி நாட்டின் வளர்ச்சிக்கும் துணைநிற்க இந்த பொங்கல் திருநாள் வழிகோலட்டும் என்று தன்னுடைய பொங்கல் வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


