
பண்டிகை காலங்களில் வாழ்த்து தெரிவிப்பதும் வாழ்த்து பரிமாறுவதும் மிக மிக இயல்பானது.
இதன் வழி, சமூக வீதியில் எண்ணற்ற நன்மை விளைகின்றன.
நண்பர்கள், உறவினர், குடும்ப உறுப்பினர், அரசியல் சமூக இயக்கங்களைச் சார்ந்தோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடையேயும் ஒருவருக்கொருவர் உள்ளார்ந்த அன்பையூம் பாசம் கலந்த பரிவையும் வெளிப்படுத்தும் விதமாக இத்தகைய வாழ்த்துப் பரிமாற்றம் அமைகிறது.
தவிர, வருத்தத்தையும் கோபத்தையும் தவிர்க்கும் துருப்புச் சீட்டு, உறவைப் புதுப்பிக்கும் தாம்பூல பரிமாற்றம் உள்ளிட்ட கூறுகளையும் இத்தகைய பண்டிகைக் கால வாழ்ந்து பரிமாற்றத்தில் எட்டலாம்.
அதேவேளை பெரும்பாலும் இட்டுக்கட்டிய காட்சிகளைக் கொண்டும் புனை ஓவியங்கள்வழியுமே வாழ்த்து தெரிவிப்பது பொதுவான வழக்காக இருக்கும்.
இத்தகைய பாங்கிற்கிடையில் தொழிலதிபர் விவேகானந்தன் தன் குடும்பத்தினருடன் பொங்கல் வைக்கும் காட்சியை அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விவேகானந்தன், ஒரு தொழிலதிபர் மட்டுமல்ல; சமூக ஆர்வலர், கொடைநெஞ்சர் அரசியல்-ஆன்மீக உயர் வட்டங்களில் நெருக்கமான தொடர்பை கொண்டிருப்பவருங்கூட;
எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள துன் சாமிவேலனாரின் சிலையை வெளிநாட்டில் வடிவமைத்து கடல் வழியே கொண்டு வந்து நிறுவிய பெருங்குத்தகையாளரும் இவரே;

அத்தகைய விவேகானந்தன், இன்றைய பொங்கல் திருநாள் நன்னாளில், தன்னுடைய மனைவி ரஞ்சனி, மகன் ஹரி நாத், தாயார், மருமகன் ஆகியோருடன் சூரிய வெளிச்சத்தில் பொங்கல் வைத்து, அந்த பொன்னானக் காட்சியை அனுப்பி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
வாழ்க விவேகானந்தனும் அவர்தம் குடும்பத்தாரும் என்று இந்த வேளையில் குமரி நல்லாள் வாழ்த்து தெரிவிக்கிறாள்!


