Monday, May 4, 2026

‘சீராட்’ பன்னாட்டு மாநாடு! சமுதாயத்தின் நம்பிக்கை!! -டத்தோ வீரா ஷாகுல்முக்மின் சீராட்

சீராட் பன்னாட்டு மாநாடு சாதாரண மாநாடு அல்ல. சமுதாயத்தின் மிகப் பெரிய நம்பிக்கையுமாகும் என்று இம்மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ வீரா ஷாகுல் தாவூது கூறினார்.

மலேசிய இந்திய இஸ்லாமிய வர்த்தக அமைப்புகளான முக்மின் – மிம்கோய்ன் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் சீராட் பன்னாட்டு மாநாடு தலைநகரில் நடைபெறுகிறது.

17 நாடுகளில் இருந்து ஏறக்குறைய 700 பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

உலகளாவிய இந்திய முஸ்லிம் சமுதாய மக்களை இந்த மாநாடு வர்த்தக அடிப்படையில் ஒன்றிணைத்துள்ளது.

இதுவொரு சாதாரண மாநாடு அல்ல. அப்படியொரு சிந்தனையை யாரும் கொண்டிருக்க வேண்டாம்.

காரணம் இந்த சீராட், சமுதாயத்தின் நம்பிக்கை. இளைஞர்களின் எதிர்கால வழிகாட்டி ஆகும்.

அதேவேளையில் சமுதாயத்தை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

உலகளாவிய நிலையில் உள்ள மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்பதே இம்மாநாட்டின் நோக்கம்.

இந்த நோக்கம், மக்களிடையே கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

நாளையும் தொடரும் இந்த மாநாட்டில் அனைவரும் முழுமையாக கலந்து பயன்பெற வேண்டும் என்றும் டத்தோ வீரா ஷாகுல் கூறினார்.

மிக்காய்ன் தலைவர் டத்தோ அப்துல் ஹமீத்

மலேசியா, தமிழ் நாடு உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகப் பெருமக்களை ஒன்றிணைத்துள்ள சீராட் மாநாடு சமுதாய ஒற்றுமையின் அடையாளமாகும் என்று மிக்கோய்ன் தலைவர் டத்தோ அப்துல் ஹமித் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை