Tuesday, February 17, 2026

எம்ஏபி ஏற்பாட்டில் பாகான் டத்தோவில் தமிழர் ஒற்றுமைப் பொங்கல் விழா!

மலேசிய முன்னேற்ற கட்சி-எம்ஏபி பேரா மாநிலம், பாகான் டத்தோவில் தமிழர் ஒற்றுமைப் பொங்கல் விழா சுற்று வட்டார பொதுமக்களின் ஆதரவோடும் கட்சியினரின் எழுச்சியோடும் மிக சிறப்பாக நடைபெற்றது.

கட்சியின் தேசியத் தலைவரும் ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவருமான பொன். வேதமூர்த்தி தலைமையில் இந்தத் தமிழர் ஒற்றுமை பொங்கல் விழா இனிதே நடைபெற்றது.

பாகான் டத்தோ, பாகான் பாசீர் தோட்டத்து அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் இந்த விழா நடைபெற்றது.

21 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வுடன் தொடங்கிய இந்த நிகழ்வில் சிறார்களுக்கான ஓவிய அங்கம், பெரியோருக்கான கரும்பு தின்னும் போட்டி ஆகியவையும் இடம்பெற்றன.

45 சிறுவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பொங்கல் திருநாளின் பெருமையை உணர்த்தும் வகையிலான ஓவிய போட்டியில் கலந்து கொண்டனர்.

ஏறக்குறைய 200 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியினை மலேசிய முன்னேற்றக் கட்சி- எம்ஏபி பாகான் டத்தோ பொறுப்பாளர் சிவா கட்சியின் மத்திய நிர்வாக குழு உறுப்பினர் சிஎஃப் மணி இருவரும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளித்த ஆலய நிருவாகத்தினருக்கு எம்ஏபி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை