
மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா கோல சிலாங்கூர் தொகுதித் தலைவர் ப. நாகப்பன் தலைமையில் பொங்கல் விழா, பாரம்பரிய தன்மையுடன் கொண்டாடப்பட்டது.
இதில் மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் கட்சியின் தேசிய ஊடக பிரிவு செயலாளரும் கொலுசிலாங்கூர் தொகுதிக்குட்பட்ட கோல சிலாங்கூர் செலாத்தான் கிளையின் தலைவருமான எல் சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
ஜாலான் கம்போங் ஜாவா, கம்போங் நிஜாமின் இந்த பொங்கல் விழா இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது.

மஇகா-வினரும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்ட இந்த பொங்கல் விழாவினை கலிடோனியா கிளையின் மகளிர் தலைவியும் கோல சிலாங்கூர் தொகுதி மகளிர் பிரிவின் துணைத் தவைவியுமான திருமதி புனிதா ஏற்பாடு செய்தார்.
கலிடோனியா கிளைத் தலைவர் மு. கலை தேவன், கொலுசிலாங்கூர் தொகுதியின் நிரந்தர தலைவரும் முன்னாள் தலைவருமான ஜீவா என்கின்ற குமாரசாமி, முஹிபா கிளைத் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



