
இளைய தமிழவேள் ஆதி குமணனின் 21-ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தனறு சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு அங்கமாக
2026 ஆம் ஆண்டுக்கான இளைய தமிழவேள் ஆதி குமணன் சாதனையாளர் விருது வழக்கறிஞர்
திருமதி ஷாலினி பாலன் மற்றும் வழக்கறிஞர்
கோபிநாத் கருப்பன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கவிஞர் அமுத இளம்பரிதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இவர்களுக்கு மாலை அணிவித்து 1,000 வெள்ளியுடன் விருதும் வழங்கி பிறப்பிக்கப்பட்டது.
லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ரெனா இராமலிங்கம், வழக்கறிஞர் ஷாலினி மற்றும் கோபிநாத் ஆகியோருக்கு சிறப்பு செய்தார் .


