
‘சுஷாத்ரல்’ என்பது அழுத்தமான, அதிரடியான ஒரு குறும்படம்; இது, வேலையில்லாத மூன்று நண்பர்கள், வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில், அதிலிருந்து மீள்வதற்காக தவறான பாதையைத் தேர்வு செய்கின்றனர். ஆனால், அவர்கள் செய்யும் குற்ற நடவடிக்கை, அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துகிறது; மரணம் முடிவல்ல என்ற படிப்பினையையும் இக்குறும்படம் தெளிவுபடுத்துகிறது.
சம்பந்தப்பட்ட மூவரும் தங்கள் தவற்றை வேதனையுடன் உணர்ந்து, அதன்பின் மீள்கின்றனர். ஓர் இருண்ட அத்தியாயத்தின் உண்மையை வெளிப்படுத்துகின்றனர். அவர்களின் மீட்சி, விதி அல்ல; மாறாக, மர்மமாக இயங்கும் ஓர் அமைப்பின் திட்டமிட்ட நடவடிக்கையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் தன்மையுடையது.

சுஷாத்ரல் குறும்படத்தில் வேலையில்லாத இளைஞர்களின் உணர்ச்சி, வாழ்க்கையில் நிகழும் வீழ்ச்சி, அவநம்பிக்கையான தேர்வு ஆகியவற்றின் விளைவுகளை உள்ளடக்கி-யது. குறிப்பாக, விதி என்னும் கர்ம வினையை தழுவி நிற்கிறது. மனிதனின் ஒவ்வொரு செயலும், அது நன்மையாக இருந்தாலும் அல்லது கெட்டதாக அமைந்-தாலும் அதற்கு எதிர்வினை உண்டு என்பதை உணர்த்துகிறது.
தேசிய திரைப்படமேம்பாட்டுக் கழகம்-FINAS, பி.ரம்லி திரையரங்கில் அண்மையில் வெளியீடு கண்ட இந்த சுஷாத்ரல் திரைப்பட வெளியீட்டின் சிறப்பு பிரமுகர்கள் கிளிப் ஷாட் நேஷ், அகோ, பிரகாஷ் ஆகியோர்.

இந்தப் படத்தை எழுதி இயக்கியவர் எஸ். அஷ்வின்; இசை ஏ. மாதேஷ் காசிநாதன்; நடிகர்கள்: தினேஷ் குமார், ஆகாஷ், மோகன் முருகன், ஹரி பிரசாந்த், சதீஸ், ஹேமேஸ்-வரன், யோகேஸ், தினேஷ் மோகன், குகன் ராஜ், கபிலன், யுவி வினோத், தர்வின், செல்வின், விசுன் ஆகியோர்.
IFM TROOP யூ டியூப் சேனலிலில் விரைவில் வெளிவர இருக்கும் இக்குறும்படத்தின் தயாரிப்பாளர் குணாளன் ராசையா(SRI RGT FIRST STAR CREATION); உதவி இயக்குநர் முகமட் ரஹ்மாட், விளம்பரம் Vindzhenchman.
காண்போரின் உள்ளத்தைக் கவரும் குறும்படம் சுஷாத்ரல் என்பது திண்ணம்.


