
-நக்கீரன்
கோலாலம்பூர், ஜன.06:
மலேசிய மனிதவளத் துறை முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் மு.சரவணனும் தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பனும் மலேசியாவின் பாரம்பரிய தலைநகரம் கோலாலம்பூரின் பாரம்பரிய அடையாளச் சின்னமான சிலாங்கூர் அரச மனமகிழ் மன்றக் கட்டடத்தில்(Royal Selangor Club) சந்தித்தனர்.
மரியாதை நிமித்தமான இந்தச் சந்திப்பின்போது, வெளியுறவுத் துறை முன்னாள் துணை அமைச்சர் டத்தோ அ.கோகிலன், தேசிய நில நிதி கூட்டுறவு சங்க செயலரும் நிருவாக இயக்குநருமான டத்தோ பா. சகாதேவன் உள்ளிட்ட பெருமக்களுடன் வர்த்தக-சமூக பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
பினாங்கில், ஜனவரி 4, 5ஆம் நாட்களில் நடைபெற்ற 11-ஆவது தமிழர் வம்சாவளி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ராஜ கண்ணப்பன் மலேசியாவிற்கு வருகை புரிந்தார்.


