Thursday, March 19, 2026

டத்தோ ஜவகர் அலி தலைமையில் நோன்பு கால பொருளுதவி!

பண்டிகைக் காலத்தில் நலிந்த மக்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உணவுப் பொருள் அளித்ததாக அல் மதரஸதுல் ஃபரீதிய்யாவின் நிறுவனர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி கூறினார்.

அல் மதரஸத்துல் ஃபரீதிய்யா ஸ்தாப்பாக் ஸ்ரீரம்பாய் குடியிருப்புப் பகுதியில் நீண்ட காலமாக வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல் சமூக நல மையமாகவும் அதுவும் அனைத்து சமய எனது மக்களுக்குமான யையமாக விளங்கி வருகிறது.

நிகழும் நோன்பு மாதத்தை முன்னிட்டு கடந்த வாரம் வசதிக் குறைந்த மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. 1995ஆம் ஆண்டு முதலே இத்தகைய பெருநாள் கால உதவி வழங்கப் படுவதாக அவர் கூறினார்.

இவ்வாண்டு ஏறக்குறைய 3,000 பேருக்கு இந்த பெருநாள் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு, மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அரிசிப் பொட்டலங்கள் வழங்க அல் மதரஸத்துல் ஃபரீதிய்யா நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் இன்று 3,333 பேர் என இலக்கு வைத்து அனைவருக்கும் அரசிப் பொட்டலம் வழங்கப்பட்டது.

இதில், இஸ்லாமிய மக்களுடன் மற்ற இன-சமய மக்களும் வந்து இந்த உதவியை பெற்றுச் சென்றனர்.

நலிந்த மக்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கில் இத்தகைய உதவியை அல் மதரஸாத்துல் ஃபரீதிய்யா செய்து வருகிறது.
எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான முறையில் இந்நிகழ்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் டத்தோ ஜவஹர் அலி கூறினார்.

Made with LogoLicious Add Your Logo App

இந்த நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல்-உம் கலந்து கொண்டு மக்களுக்கு உதவிப் பொருட்களை எடுத்து வழங்கினார்.

பிரெஸ்மா தலைவர் டத்தோ முஹம்மது மொஹ்சின், எஸ். எம். எஸ் தீன் குழுமத் தலைவர் டத்தோ சிராஜுத்தீன், மியாக் நிறுவனத்தின் யூசுஃப் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை