Thursday, April 2, 2026

அந்நியத் தொழிலாளர் விவகாரத்தில் இந்திய உணவகங்களுக்கு எதிராக பாகுபாடு! -டத்தோ சுரேஸ் கேள்வி

கோலாலம்பூர்: மார்ச் 26-
அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் விவகாரத்தில் இந்திய உணவகங்களுக்கு எதிராக மற்றொரு பாகுபாடு காட்டப்படுகிறது என்று
பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ கோவிந்தசாமி வேதனை-யுடன் தெரிவித்தார்.

தற்போது, இந்திய உணவக உரிமையாளர்-கள் புதிய வெளிநாட்டுப் பணியாளர் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் பெறுவ-தில்லை. மேலும் gantian எனப்படும் மாற்றுத் பணியாளர்களுக்கான விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்படுவதில்லை.

இதற்கு மாறாக, மற்ற இனங்களைச் சேர்ந்த உணவகங்களுக்கு புதிய ஒப்புதல்களும் மாற்று பணியாளர்களும் வழங்கப்-படுகின்றன.

ஆனால் இந்திய உணவகத் துறை தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

அந்நியத் தொழிலாளர்களைப் பெறுவதற்-கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக அதன் உறுப்பினர்களிடமிருந்து பிரிமாஸ் ஏராளமான புகார்களைப் பெற்றுள்ளது.

ஓஎஸ்ஜி இணையதளம் வழியாகச் செய்யப்-படும் விண்ணப்பங்களில் காலியிடங்கள் எதுவும் காட்டப்பட வில்லை.

மேலும் நேரடியாக வந்து விண்ணப்பிக்கும் முயற்சியும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
எனவே, உணவக உரிமையாளர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தொடர்வதற்குத் தெளிவான வழி ஏதுமின்றி தவிக்கின்றனர்.

இந்த நிலைமை, நாடு தழுவிய அளவில் இந்திய உணவகங்களில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறைக்கு வழி-வகுத்துள்ளது.

இது அன்றாடச் செயல்பாடுகளையும் வாடிக்கையாளர்களுக்குத் திறம்படச் சேவை செய்யும் வணிகத் திறனையும் பாதிக்கிறது.

இந்தப் பிரச்சினை உடனடியாகக் கவனிக்கப்படாவிட்டால், அதன் தாக்கம் உணவகத் துறையைத் தாண்டி, பரந்த அளவில் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று அவர் சொன்னார்.

உணவக வணிகங்களைச் சார்ந்துள்ள விநியோகஸ்தர்கள், தளவாட வழங்குநர்கள், பிற துணைத் தொழில்களும் தேவைக் குறைவு- வருமான இழப்பையும் எதிர்-கொள்ள நேரிடும் என்று டத்தோ கோவிந்த-சாமி கூறினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை