Thursday, April 2, 2026

இளைய சமுதாயத்தினர் உள்ளங்கவரும் ‘ஜிக்கா ஜிக்கா’ இசை ‘வீடியோ’ வெளியீடு

மலேசியத் தமிழ் இசை – கலை உலகில் இன்று ஓர் அதிரடி கலைப்படைப்பு வெளியாகி உள்ளது.

மலேசியத் தமிழ் ரசிகர்களின் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் கொண்டாடும் வகையில் இந்த ‘ஜிக்கா ஜிக்கா’ என்னும் தலைப்பிலான பாடலும் காட்சியும் இன்று பிற்பகலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய இசை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், மணி வில்லன் எழுதி பாடிய ‘ஜிக்கா ஜிக்கா’ பாடல் இன்று பிற்பகல் 2:00 மணி அளவில் YouTube வலைதலத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை, இந்தப் பாடல் காட்சி அள்ளி வருகிறது.

இந்த இசை வீடியோவை நாயகன் குழுவினர் தயாரித்துள்ளனர். பாடலின் அறிமுக நிகழ்ச்சி இரண்டு நாட்களுக்கு முன் டத்தோ ந.சிவகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

வண்ணமயமான காட்சிகள், உற்சாகமான நடனங்கள் மற்றும் இளைய தலைமுறையை கவரும் இசை அமைப்புகள் மூலம், “ஜிக்கா ஜிக்கா” ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசை உலகில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் மணி வில்லன், தனது தனித்துவமான குரல் மற்றும் எழுத்தின் மூலம் இப்பாடலை ரசிகர்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.

மணி வில்லனின் முயற்சியும் அவரின் ‘எம்.வி. புரொடக்சன்’சார்பில் தயாரிக்கப் பட்டுள்ள இக்கலைப் படைப்பும் வெற்றியடைய குமரி வாழ்த்துகிறாள்!!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை