Thursday, April 2, 2026

செய்தியாளர் ‘ராவாங் காளி’ கைது: -தேசிய ஊடக மன்றம் எச்சரிக்கை!சார்லஸ் கண்டனம்!!

நாட்டின் வடபுலத்தில் உள்ள ஒரு முக்கியமான தொழிற்சாலையில் அந்நிய நாட்டு தொழிலாளர்கள் குறித்த ஒரு செய்தியை வெளியிட்டமைக்காக மலேசிய தமிழ் ஊடக வட்டத்தில் ‘ரவாங் காளி’ என்று அழைக்கப்படும் காளிதாசன் சுப்பிரமணியன் என்ற செய்தியாளர் காவல் துறையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளது ஊடக சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் அச்சுறுத்தலா என்று கிள்ளான் நாடாளு-மன்ற தொகுதியின் மேநாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ வினா தொடுத்துள்ள-துடன் இதன் தொடர்பில் கடும் கண்டனத்-தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழ் இணைய ஊடக வட்டத்தைச் சேர்ந்த செய்தியாளர் எஸ். காளிதாசன் கைது செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் ஊடக சுதந்திரம் குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்தக் கைது நடவடிக்கை தவிர்த்திருக்கப்பட வேண்டும் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை, கூலிம் உயர் தொழில்நுட்பப் பூங்காவில் (Kulim Hi-Tech Park) கட்டுமானம் நடைபெறும் தொழிற்சாலை வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டில் காளிதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் இணைய தமிழ் ஊடகமான ‘தினத் தந்தி’யின் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளி யிட்டுள்ள சார்லஸ், “உண்மையை வெளிச்-சத்திற்குக் கொண்டு வருவதில், குறிப்பாக பாதிக்கப்படும் சமூகங்களின் நிலையை பதிவு செய்வதில், செய்தியாளர்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றனர்” என்று வலி-யுறுத்தினார். ஒரு செய்தியாளர் தன் பணியைச் செய்யும்போது கைது செய்ய-ப்படுவது, ஊடகத்துறையினருக்கு மட்டுமல்ல, உண்மைத் தகவலை அறியும் பொதுமக்களின் உரிமைக்கும் அச்சுறுத்த-லாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கை ஊடக உலகை அச்சு-றுத்து.வதாக அமைந்துள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.

இதேவேளை, கெடா மாநில போலீஸ் தலைவர் Adzli Abu Shah, இந்த சம்பவத்தில் செய்தியாளர் உட்பட 10 பேர் கைது செய்யப் பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். கட்டு-மானம் நடைபெறும் தொழிற்சாலை வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்ததாக அவர்கள்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்-பட்டுள்ளது. அங்கு வெளிநாட்டு தொழிலா-ளர்கள் பணியில் அமர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தக் குழு செயல் பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், மலேசிய தேசிய ஊடக மன்றம்- Malaysian Media Council இந்தக் கைது சம்பவத்தை மிகவும் தீவிரமாகக் கருதுவ-தாக தெரிவித்துள்ளது. செய்தியாளர்கள் சம்பவ இடங்களுக்குச் சென்று தகவல் சேகரிப்பதும், கண்காணிப்பதும், பொதுநலம் சார்ந்த தகவலை வெளிக்கொணர்வதிலும் முக்கிய பங்காற்றுவதாக மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

செய்தி சேகரிப்பின்போது ‘அத்துமீறல்’ என்ற சட்டத்தின் விளக்கம் மிகவும் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும். இல்லையெனில், செய்தியாளர்களின் பணியே குற்றமாக்கப் படும் அபாயம் உள்ளது,” என்றும் தேசிய ஊடக மன்றம் எச்சரித்துள்ளது.

செய்தியாளர்கள் எந்தக் குற்ற நடவடிக்கை-யிலும் ஈடுபடாத சூழலில், அவர்கள் தங்கள் கடமையை அழுத்தமின்றி நிறைவேற்றும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காளிதாஸை உடனடியாக விடுதலை செய்வதே சட்டத்தின்மீது பொது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முதல் படியாக அமையும் என்று சார்லஸ் வலியுறுத்தியுள்ளார்.

மொத்தத்தில், செய்தியாளர் தொடர்பான வழக்குகளில் சட்டங்கள் எவ்வாறு பயன் படுத்தப்படுகின்றன என்பதையும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை