
உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, தீபகற்ப மலேசியாவில் ரோன் 97 ரகப் பெட்ரோல் , டீசல் ஆகியவற்றின் டீசலின் சில்லறை விலைகள் லிட்டருக்கு 5 சென் உயர்த்தப்பட்டுள்ளன.ரோன் 97 ரகப் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.38 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக, ரோன் 97 ரகப் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.33-க்கு விற்கப்பட்டது. மேலும், தீபகற்ப மலேசியாவில் டீசல் விலையும் லிட்டருக்கு 3.03 இல் இருந்து RM3.08 ஆக உயர்ந்துள்ளது. உலகளாவிய சந்தை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து, தானியங்கி விலை நிர்ணய பொறிமுறை சூத்திரத்தின் அடிப்படையில் வாராந்திர விலைகளை சரிசெய்யும் என்று நிதி அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


