
நாட்டின் மூத்த பத்திரிகையாளர் ராகவன் கருப்பையா நீண்ட காலமாக பணியாற்றி-வரும் ஆயுள் காப்புறுதித் துறையில் விருது வழங்கி சிறப்பிக்கடனப்பட்டுள்ளார்.
1978ஆம் ஆண்டு முதல் தமிழ் மலர் நாளித-ழில், பிறகு தமிழ் ஓசை தினசரியிலும் தமது எழுத்துப் பணியைத் தொடங்கிய அவர் ‘ரோய்ட்டர்ஸ்'(Reuters) எனும் பிரிட்டிஷ் இணைய ஊடகத்திலும் ஏ.எஃப்.பி.(AFP) எனும் ஃபிரான்ஸ் நாட்டு இணைய ஊடகத்-திலும் சிறிது காலம் பணியாற்றினார்.
பிறகு 1985ஆம் ஆண்டில் கிரேட் ஈஸ்டர்ன் ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் ஊழியராக பணியில் அமர்ந்த ராகவன் கருப்பையா, 6 ஆண்டுகள் கழித்து காப்புறுதி விற்பனை பிரிவுக்கு மாறி ஒரு முகவராக தடம் பதிக்கத் தொடங்கினார்.
கடுமையான உழைப்பின்வழி தம்மை உயர்த்திக் கொண்ட அவர் ஆறே ஆண்டுக-ளில் அந்நிறுவனத்தின் மிக உயரிய பதவி-யான குழு நிர்வாகியாக பதவி உயர்வு பெற்றார்.
இருந்தபோதிலும் பகுதி நேரமாக தமிழ் எழுத்துப் பணியை தொடர்ந்து மேற்-கொண்டு வரும் ராகவன் கருப்பையா, இன்று வரையிலும் சமூக, அரசியல் அலசல் கட்டுரைகளைத் தொடர்ந்து படைத்து வருகிறார்.
அவருடைய கட்டுரைகள் ‘மலேசியா இன்று’ எனப்படும் ‘மலேசியாகினி’யின் தமிழ் பகுதியிலும் தென்றல், வானம்பாடி வார இதழ்களிலும் பிரசுரமாகி வருகின்றன.
தொடர்ந்து 40 ஆண்டுகளாக காப்புறுதித் துறையில் கோலோச்சிவரும் ராகவன் கருப்பையாவுக்கு, அவர் சார்ந்துள்ள ‘கிரேட் ஈஸ்டர்ன்’ ஆயுள் காப்புறுதி. நிறுவனம் இரு தினங்களுக்கு முன் ‘நீண்டகால சேவை’க்-கான விருதை வழங்கி கௌரவம் செய்தது.
இந்த விருதளிப்பு நிகழ்ச்சி பகாங், கெந்திங் மலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நடைபெற்றது.
தமது 40 ஆண்டுகால ஆயுள் காப்புறுதி சேவையில் எண்ணற்ற வெற்றியாளர்களை உருவாக்கியுள்ள அவர் 2,000திற்கும் மேற்-பட்டோருக்கு காப்பீட்டு பாதுகாப்பு வழங்கி யுள்ளார்.
காப்புறுதி சேவையின்வழி 53 நாடுகளுக்கு பயணித்துள்ள ராகவன் கருப்பையா, இரு பயண நூல்கள் உள்பட 4 புத்தகங்களை வெளியீடு செய்துள்ளார்.


