
மலேசியாவில் புகழ்பெற்ற கணித ஆசிரியர்களில் ஒருவரான ஜனகன் ஆறுமுகம் ஒரே நேரத்தில் இரட்டை விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
Pusat Tusyen Arena Matriks நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவரும் செகு ஆ.ஜனகன், அவருடைய நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் இரண்டு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் நாள் இணையதள வகுப்பின் மூலமாக 1,200 மாணவர்களுக்கு 14 மணி நேரம் 30 நிமிடங்கள் இடைவிடாது கணித பாடத்தைப் பயிற்றுவித்தார் ‘ச்செகு’ ஜனகன்.
கணிதப்பாட அமர்வில் தொடர்ச்சியாக அதிக மாணவர்கள் பங்கேற்பு என்ற சாதனையை ஆசியான் நாடுகளில் இவர் ஏற்படுத்தினார்.
இந்த சாதனைக்காக அவருக்கு ஆசியான் சாதனையாளர் விருதை Asian Record’s நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Eldrick Koh வழங்கி சிறப்பித்தார்.
மேலும் இந்த நிறுவனத்தின் சார்பில் இளம் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது இன்னும் குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு சாதனையாளர் விருது வழங்கப்பட்ட போது மாணவர்கள் பெரும் உற்சாகத்தில் திளைத்தனர்.
ஜனகனின் பெற்றோர் உட்பட ஆசிரியர்களும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.



