Wednesday, April 15, 2026

நேதாஜி மண்டபத்தில் இன்று மாலை இலக்கிய சாரல்!

பருவம் தப்பிய இற்றை நாட்களில் இன்று மாலை திடீர் மழை வருகிறதோ இல்லை-யோ நேதாஜி மண்டபத்தில் மண்டுகிற-வர்கள் கண்டிப்பாக தமிழிலக்கிய சாரலில் நனைய வேண்டி இருக்கும்.

நெஞ்சை அள்ளும் நெல்லை ஜெயந்தாவின் இலக்கியப் பேச்சுடன் சிங்கை நா. ஆண்டி-யப்பனின் ‘வாமனத் தீவு’ நூல் வெளியீட்டு விழாவும் ஒருசேர இடம்பெற இருக்கின்றன..

தோகை விரிக்கும் மயில் மாதவியை தான் புனையும் காதல் பாடல்களில் தப்பாமல் காட்சிப் படுத்தும் வாலியை மையமாகக் கொண்டு ‘பாட்டுடைத் தலைவன் வாலி’ என்னும் தலைப்பில் பாவலரும் சொலல்வல்-லாருமான நெல்லை ஜெயந்தா, எதுகை மோனை தப்பாத செழுமையுறு கவி நடையில் பொழியும் சொல் மழை, கேட்போரின் உள்ளத்தை இனிமையுற நனைய வைக்கும்.

‘நீ நனைத்த பனித்துளிகள்’, ‘தொட்டிலோசை’, ‘வாலிப வாலி’,’ ‘நிலாவணம்’ போன்ற நூல்களை இயற்றியவர் கவிமாமணி விருது பெற்ற சொல்வாணர் நெல்லை ஜெயந்தா.

இவரின் உரைக்கு முன்னம், நூல் வெளியீட்டு விழா இம்மலையக சொல்வேந்தர் டத்தோஸ்ரீ மு. சரவணன் தலைமையில் நடைபெற இருக்கிறது.

1970-ஆம் ஆண்டுகளில் தமிழ் அச்சு ஊடகத்தில் பணியாற்றி மலையக மைந்தராக இருந்து பின்னர் சிங்கைவாசியாக மாறியவரும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மேனாள் தலைவருமான நா ஆண்டியப்பனின் வாமனத் தீவு நூல் வெளியீடுகாண இருக்கிறது.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நெல்லை ஜெயந்தாவுடன் நிகழ்ச்சி நெறியாளர் ஞான சைமன்.

அழகு என்னும் பொருளை முன்னே சுட்டினாலும் அரசியல், வாழ்வியல், ஆன்மிகம் சார்ந்து ஏராளமான பொருட்களை தன்னகத்தே கொண்டது வாமனம் என்னும் சொல்;

ஓர் அழகான பெண் என்னதான் அழகுமிகு சேலையை அணிந்திருந்தாலும் அப்பெண்ணுக்குள் ஏராளமான அம்சங்கள் இருப்பதைப் போல ‘அழகுத் தீவு’ என்னும் சட்டையை அணிந்திருந்தாலும் வாமனத் தீவுக்குள் ஏராளமான அம்சங்கள் இருக்கும் என்று ஊகிக்க இடம் உண்டு.

இன்று ஏப்ரல் 13-ஆம் நாள் திங்கட்கிழமை மாலை 6:00 மணி அளவில் தொடங்க இருக்கும் இந்த இலக்கிய-நூல் வெளியீட்டு நிகழ்வில், ஏராளமான இலக்கியவாணர்-களும் சமூக மேன்மக்களும் கலந்து சிறப்-பிக்க இருக்கின்றனர்.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குனர் ‘சமூக காவலர்:
டத்தோ பா. சகாதேவன் சிறப்பாக கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வேரும் விழுதுமாக இருக்கின்ற பெ. ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

இதே சங்கத்தின் மேனாள் தலைவரும் கல்வியாளருமான ம. மன்னர் மன்னன், வாமனத்தீவை அரங்கேற்றம் காணவைப்-பார்.

பத்திரிகையாளரும் தமிழ்நெஞ்சருமான ஞான சைமன் வழிநடத்த இருக்கும் இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூர் கவிமகன் பிச்சினிகாடு இளங்கோவின் வாழ்த்துரையும் இடம்பெற உள்ளது.

இந்த இலக்கிய நிகழ்வில் கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கின்ற இலக்கிய ஆர்வலர்களும் தமிழன்பர்-களும் வாய்ப்பு இருந்தால் உயர்கல்வி மாணவர்களும் உள்ளிட்ட பொதுமக்கள் முன்னதாக சுவைநீர் பருகி விட்டு, தொடர்ந்து தமிழ்த்தேன் பருக முனைந்தால், அவர்களுக்கு தோல்வி இருக்காது என்பது திண்ணம்!..

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை