
பத்து மலை கோம்பாக் மாவட்டம், தாமான் ஸ்ரீ கோம்பாக் பெருங்குடியிருப்புப் பகுதியில் 10 பிரிவுகள் உள்ளன. இவற்றில் Fasa-10 பிரிவில் நோன்புத் திருநாள் ஒற்றுமை விருந்தோம்பல் நிகழ்ச்சி இன்று ஏப்ரல் 16, முன்னிரவில் நடைபெற்றது.

Fasa-10 ‘ருக்குன் தெத்தாங்கா’ (KRT)சமூக நலக் குழுவினர் சார்பில் இந்தப் பொது விருந்தோம்பல் நிகழ்ச்சி, அண்மையில் கொண்டாடப்பட்ட நோன்பு திருநாள் தொடர்பில் நடைபெற்றது.

ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வட்டார ருக்குன் தெத்தாங்கா குழு அமைக்கப்பட்டது முதல் இதன் தலைவராக செயல்படுகின்ற ‘துவான்’ அஸ்மான் இந்த வட்டார சமூக நலக் குழுவை திரும்பட நிர்வகித்து வருவதுடன் வட்டார குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம், சமய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து ஒற்றுமையை பேணி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் பொழுது 2026-2027 தவணைக்கான புதிய நிர்வாகக் குழுவினரும் தேர்வு செய்யப்பட்டனர்.



