
MAJLIS PELANTIKAN WATIKAH PEMIMPIN MUDA 2026
இன்று 2026-ஆம் ஆண்டின் இளம் தலைவர்-களுக்கான பதவி நியமன நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது.
இந்நிகழ்ச்சியில் முதல் அங்கமாக மாண-வன் நவயுக பாரதி த/பெ தியாகராஜன் இறை வணக்கப் பாடலைப் பாடினார். தொடர்ந்து, முனைவர் விக்டர் ஆசிர்வாதம், வரவேற்புரையாற்றினார். அடுத்த அங்க-மாக, பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி செளண்டேஸ்-வரி கிருஷ்ணன் தலைமை உரையாற்றி-னார்.

இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு வருகை-யாளரான பள்ளியின் தொடர்புத் துறை அதிகாரி Sarjan கமால் லிங்கம் இளம் தலை-வர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் சிறப்-புரை வழங்கினார்.
தொடர்ந்து, இன்றைய இளம் தலைவர்-களுக்கான பதவி நியமன நிகழ்ச்சியை பள்ளியின் தொடர்புதா துறை அதிகாரிகள் Inspektor ரத்னக்குமார் வரதராஜு, Sarjan கமால் லிங்கம் மற்றும் பள்ளியின் பெற்-றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டத்தோ புவனேந்திர குமார், தலைமையாசிரியர், துணைத் தலைமையாசிரியர்கள் ஒன்றி-ணைந்து அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, பள்ளியின் தலைமை மாணவனாக அரண் த/பெ திலிப்-குமார் கனகராஜ், முதலாவது துணைத் தலைமை மாணவியாக ஜனனி த/பெ ஹரி ராஜா, இரண்டாவது துணைத் தலைமை மாணவராக தேவ்டர்ஷன் த/பெ கோபால கிருஷ்ணன் ஆகியோரின் பதவி நியமன சான்றிதழ்கள் தலைமையாசிரியரும் மாணவ நலத் துணை தலைமையாசிரியரும் கையொப்பமிட்டு அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்டன.

இவ்வங்கம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. இன்றைய தலைவர்கள்தான் நாளைய சமுதாயத்தின் தூண்கள் என்பதில் ஐயமில்லை.
மேலும், மாணவத் தலைவர்கள், கருவள மையத் தலைவர்கள் மற்றும் சக மாணவர்-கள் வழிகாட்டித் தலைவர்களென மொத்தம் 238 மாணவர்கள் தங்களின் பதவி நியமன சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர் என்-பது குறிப்பிடத்தக்கது.

பள்ளியின் நெறியுரைஞர் குமாரி வித்யா தியாகராஜா, நூலகப் பொறுப்பாசிரியர் திருமதி புனிதவள்ளி முனீஸ்பரன் மற்றும் மாணவத் தலைவர்களின் பொறுப்பாசிரியர் குமாரி துர்காஷினி சுப்பிரமணியம் தலைமையிலும் மற்ற ஆசிரியர்களின் ஒத்துழைப்பிலும் இன்றைய நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறி-யது.

இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற எல்லா வகையிலும் உதவி நல்கிய தேவஸ்தான தலைவர் தான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, பள்ளியின் அறங்காவலர் டத்தோ ந. சிவகுமார் மேலாளர் வாரிய பொறுப்-பாளர்கள்,, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் முன்னாள் மாணவர் சங்கத்தினர், ,பெற்-றோர் நல்கைத் திட்ட உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட தரப்பினர் தலைமை-யாசிரியை திருமதி கி.செளண்டேஸ்வரிக்கு பக்க பலமாகவும் உறுதுணையாகவும் இருப்பதாக உறுதி அளித்தனர்.


