
நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு கட்டியம்கூரும் வகையில் அறுபது ஆண்டுகளாக நடைபெற்ற தேசிய முன்னணி ஆட்சியை அகற்றிவிட்டு, நம்பிக்கைக் கூட்டணி அமைந்த 2018-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அவரின் அன்றைய உதவியாளர் யூசோப் ராவுத்தர் தொடுத்த வழக்கை வேறு நீதிபதி விசாரிப்பார் என்று ராவுத்தரின் வழக்கறிஞர் ரஃபீக் ரஷிட் அலி இன்று தெரிவித்தார்.
இதுகாஃறும் வழக்கை விசாரித்துவந்த நீதிபதி ஜோகான் லீ, அலோர்ஸ்டார் உச்ச நிதிமன்றத்திற்கு மாற்றலாகிச் செல்வதால் இந்தச் சூழல் நேர்ந்துள்ளது என்று ரஃபீக் மேலும் கூறினார்.
அன்வர் சார்பாக முன்னிலையாகும் வழக்கறிஞர் நவ்பிரீத் சிங், இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் தோதான பொதுவான நாட்கள் அமையாதாதால், இந்த வழக்கு தள்ளிப் பொகிறது என்று தெரிவித்துள்ளார். அதேவேளை, இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டன என்று மேலும் தெரிவித்தார்.


